»   »  #ஜல்லிக்கட்டு: ஆர்யா இனி அந்த கேள்வியை கேட்கவே முடியாது!

#ஜல்லிக்கட்டு: ஆர்யா இனி அந்த கேள்வியை கேட்கவே முடியாது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று நடிகர் ஆர்யா இனி கேட்க முடியாது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியோ ஒருபடி மேலே போய் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து அமீர் சந்தனத்தேவன் படத்தை இயக்குகிறார்.

சந்தனத்தேவன்

சந்தனத்தேவன்

சந்தனத்தேவன் படத்தில் ஆர்யாவும், அவரின் தம்பி சத்யாவும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். போஸ்டரில் அண்ணனும், தம்பியும் காளையை அடக்குவது போன்று போஸ் கொடுத்துள்ளனர்.

ஆர்யா

ஆர்யா

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்யா, ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று ட்விட்டரில் கேட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார். இந்நிலையில் அமீரின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்ட ஆர்யாவை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று இனியும் ஆர்யா கேட்க முடியாது. அமீர் நிச்சயமாக ஜல்லிக்கட்டு குறித்து இந்நேரம் ஆர்யாவுக்கு விளக்கி இருப்பார் என்று நம்பப்படுகிறது.

அமீர்

அமீர்

அமீர் பிலிம் கார்பரேஷன் தயாரிக்கும் சந்தனத்தேவன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் போராடி வரும் நேரத்தில் அமீரின் இந்த அறிவிப்பு பலருக்கும் ஆறுதலாக உள்ளது.

English summary
Arya who tweeted saying 'What is Jallikattu?' can't ask that question anymore. He is acting in Santhanathevan movie which is based on Jallikattu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos