twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனுராக் காஷ்யப் தயாரிப்பில் மெரினா புரட்சியின் பின்னணியை பேசும் 'ஜல்லிக்கட்டு'!

    மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி ஜல்லிக்கட்டு எனும் படம் உருவாகி வருகிறது.

    |

    Recommended Video

    மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியை படமாக்கும் ஹிந்தி இயக்குனர்- வீடியோ

    சென்னை: மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தை மையாக வைத்து, பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் ஜல்லிக்கட்டு எனும் பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

    அகிம்சா ப்ரொடக்‌‌ஷன் சார்பில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் நிருபமா இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஜல்லிக்கட்டு'. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டத்தை மையமாக வைத்து, சந்தோஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    Jallikattu: A film on Marina revolution

    உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, கலந்துகொண்டவர்கள் அதற்காக கூறும் காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட வடிவங்கள் ஆகியவற்றை இணைத்து ஒரு படமாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ்.

    அமெரிக்காவின் ஹாவோர்டு பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஜல்லிக்கட்டு தான். அதே போல, கென்யாவில் உள்ள மசாய்மாரா எனும் இடத்தில் உள்ள காளைகளும் நம்மூர் காளைகளும் ஒரே இனத்தை சேர்ந்தவை என்பது டிஎன்எ பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அங்கு சென்றும் படப்பிடிப்பு நடத்தியதாகக் கூறுகிறார் சந்தோஷ்.

    இந்த படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள் தான். இயக்குனர் சந்தோஷூம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறுது. இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood director Anurag Kashyab is producing the movie Jallikattu, which is directed by Santhosh based on the protest happened in Chennai Marina last year for Jallikattu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X