twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீரப்பாண்டிய கட்டபொம்மன் டு கருப்பன்.. தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டு!

    |

    சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் இருந்து விஜய் சேதுபதி படம் வரை ஜல்லிக்கட்டு போட்டி பல தமிழ் சினிமாக்களில் மாஸ் காட்டியுள்ளது.

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல் என பல முன்னணி நடிகர்கள் ஜல்லிக்கட்டு காட்சியை தங்கள் படங்களில் வைத்து தமிழர்களின் வீர விளையாட்டை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் நீங்காமல் நினைவு பெற செய்து வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய ஜல்லிக்கட்டு காட்சிகள் குறித்த தொகுப்பை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இங்கே காணலாம்.

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    பி.ஆர். பந்துலு இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடிப்பில் சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனின் வாழ்க்கை சரித்திரத்தை தமிழ் ரசிகர்களுக்கு எடுத்துரைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் ஆரம்ப காட்சியில் ஜெமினி கணேசன் காளையை அடக்கும் காட்சியை மன்னராக நடித்த சிவாஜி ரசித்துப் பார்க்கும்படி அப்பவே செம்ம ஸ்கெட்ச் போட்டு எடுத்திருப்பார்கள்.

    மாட்டுக்கார வேலன்

    மாட்டுக்கார வேலன்

    சிங்கத்துடன் சண்டையிடும் காட்சிகளில் நடித்த எம்.ஜி.ஆர் மாட்டுக்கார வேலன் படத்தில் மாட்டுக்காரராக நடித்து அசத்தியிருப்பார். மாடுகளை தமிழர்கள் தெய்வமாக வணங்கி வருவதை அந்த படம் வெளிக்காட்டியிருக்கும்.

    சூப்பர்ஸ்டாரின் முரட்டுக்காளை

    படத்தின் டைட்டிலிலேயே முரட்டுக்காளை என வைத்து விட்டு படத்தில் ஜல்லிக்கட்டு காட்சி வைக்காமல் இருந்தால் நல்லாவா இருக்கும். பொதுவாக என் மனசு தங்கம் பாடலுக்கு முன்பாக ஜெய்சங்கரின் காளையை அடக்கி விட்டு கெத்தாக ரஜினி பாடும் அந்த பாடல், இன்று வரை சூப்பர் ஹிட் தான். அந்த ஜல்லிக்கட்டு காட்சியும் வேற லெவலில் அப்போதே படமாக்கப்பட்டிருக்கும்.

    விரு விருமாண்டி விருமாண்டி

    கமல்ஹாசன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி படத்தில் வாடி வாசலில் காத்திருக்காமல், போஸ்ட் கம்பத்தில் காத்திருக்கும் நடிகர் கமல், நாயகி அபிராமியின் கம்பீரமான காளையை தாவிக் குதித்து திமிலை பிடித்து, முட்டி, மோதி மல்லுக்கட்டி போராடி அடக்கும் காட்சி செம்ம ஹைலைட்டாக உருவாக்கப்பட்டிருக்கும்.

    ராஜகுமாரன் ஜல்லிக்கட்டு சீன்

    ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான படம் ராஜகுமாரன். பிரபு, மீனா, நதியா, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில், செம்ம மாஸான ஜல்லிக்கட்டு காட்சி படமாக்கபட்டிருக்கும். நாசரின் ராஜகாளையை ஊரில் அடக்க ஆம்பளைகளே இல்லையா என்று நாசர் கேட்க, நாயகன் பிரபு, தான் அடக்குவதாக சொல்லி களத்தில் இறங்குவார். கடும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் காளையை அடக்கி ஊர் மக்களின் கெளரவத்தை காப்பாற்றுவார்.

    சும்மா விடுவாரா நாட்டாமை

    நாட்டாமை, சூரியவம்சம், சேரன் பாண்டியன் என பல கிராமத்து படங்களில் நடித்து அசத்திய நம்ம நாட்டாமை சரத்குமார் மட்டும் ஜல்லிக்கட்டு காட்சியை படமாக்காமல் விட்டுவிடுவாரா என்ன? சேரன் பாண்டியன் படத்தில், காளையை அடக்க முயன்று முடியாமல் தோற்று விழும் ஆனந்தபாபுவை காப்பாற்ற களமிறங்கி காளையை அடக்கி காட்டுவார் சரத்குமார். ஆனால், அதை சகித்துக் கொள்ள முடியாமல் பெரிய கவுண்டராக அந்த படத்தில் நடித்த விஜயகுமார் அந்த மாட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவார்.

    அரவான் ஜல்லிக்கட்டு சீன்

    அரவான் ஜல்லிக்கட்டு சீன்

    வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான அரவான் படத்தில் பசுபதியை மாடு முட்டித் தள்ளிவிடும். அவருக்கு பதிலாக களமிறங்கும் ஆதியை நீ வெளியூர்க்காரன் கலந்து கொள்ளாதே என பசுபதி தடுக்க, யாருடா வெளியூர்க்காரன் நானும் இந்த ஊர்க்காரன் தான் என கெத்தாக சொல்லி மாட்டையும் திமிலை பிடித்து அடக்கி அசத்துவார்.

    பாகுபலி

    ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி படத்திலும் காளையை அடக்கும் கம்பீரமான காட்சி இடம்பெற்றிருக்கும். வழக்கமாக ஹீரோக்களே காளைகளை தமிழ் சினிமாவில் அடக்கி வரும் நிலையில், வில்லன் ராணா மிகப்பெரிய காளை ஒன்றை தனியாளாக எதிர்கொண்டு அடக்கும் காட்சியை அற்புதமாக ராஜமெளலி படமாக்கி இருப்பார்.

    கருப்பன்

    2017ம் ஆண்டு பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்திலும் ஜல்லிக்கட்டு காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும். சிஜி உதவி இன்றி மாடு போன்ற ரோபோ மாடல் பயன்படுத்தி கேமரா ட்ரிக்ஸ் மூலம் அசத்தலாக படமாக்கப்பட்ட அந்த ஜல்லிக்கட்டு காட்சியின் மேக்கிங் வீடியோவும் படம் வெளியான சமயத்தில் வைரலானது.

    மெரினா புரட்சி

    மெரினா புரட்சி

    ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என கூட்டம் கூட்டமாக போராட்டம் செய்ததை ஆவணப்படமாக எடுத்து மெரினா புரட்சி எனும் பெயரில் கடந்த டிசம்பர் 13ம் தேதி வெளியிட்டனர். எம்.எஸ். ராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான சிறந்த பதிவு படம் என்ற பாராட்டுக்களை பெற்றது.

    English summary
    From Veerapandiya Kattabomman to Vijay Sethupathi’s Karuppan movie lot of Jallikattu scenes portrays in Tamil Cinema. Superstar’s Murattu Kaalai and Kamalhaasan’s Virumandi Jallikattu scenes are making in huge level.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X