twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்!

    |

    சென்னை: 93வது ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் 'ஜல்லிக்கட்டு' திரைப்படம் தேர்வாகி உள்ளது.

    Recommended Video

    Oscar Awards | India சார்பில் போட்டியிட Jallikattu தேர்வு | Filmibeat Tamil

    பிரபல மலையாள சினிமா இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான படம் ஜல்லிக்கட்டு.

    மிருகங்களை விட மனிதர்களின் மனங்கள் எத்தனை மிருகத்தன்மை வாய்ந்தது என்பதை சுட்டிக் காட்டியிருந்தது ஜல்லிக்கட்டு.

    93வது ஆஸ்கர்

    93வது ஆஸ்கர்

    அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்கர் திரைப்பட விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா முடிந்த பிறகே கொரோனாவின் கோரத் தாண்டவம் ஆரம்பமானது. கொரோனா பிரச்சனைகள் உலகளவில் குறைந்து வரும் நிலையில், அடுத்தாண்டும் ஆஸ்கர் விருது விழா நடைபெறும் என்று தெரிகிறது.

    ஒடிடி பிளஸ் தியேட்டர்

    ஒடிடி பிளஸ் தியேட்டர்

    கொரோனா கலவரத்தால் தியேட்டர்கள் உலகம் முழுவதும் மூடப்பட்டன. அதனால், ஏகப்பட்ட படங்கள் ஒடிடியில் வெளியாகின. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவுக்கு தியேட்டரில் வெளியான படங்களும், ஒடிடியில் வெளியான படங்களும் பங்கு பெறலாம் என ஆஸ்கர் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

    ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு

    ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு

    கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் ரேஸுக்கு செல்ல தகுதியான திரைப்படமாக தேர்வாகி உள்ளது. தென்னிந்திய திரைப்படம் ஒன்று இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தென்னிந்திய சினிமா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

    எப்படி தேர்வானது

    எப்படி தேர்வானது

    ஆஸ்கர் விருது விழாவுக்கு ஆண்டு தோறும் இந்தியாவில் வெளியாகும் பல்வேறு மாநில படங்களை அலசி ஆராய்ந்து மத்திய திரைப்படக் குழு, ஒரு சிறந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவது வழக்கம். இந்த முறை மலையாளத் திரைப்படமான ஜல்லிக்கட்டு படத்தை இந்தியா சார்பாக தேர்வு செய்த தேர்வுக் குழு தலைவர் ராகுல் ராவைல் கூறுகையில், "மிருகங்களை விட மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை இந்த படம் எடுத்துரைக்கிறது" என்றார்.

    சிறந்த இயக்குநர் விருது

    சிறந்த இயக்குநர் விருது

    ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியதற்காக கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50வது சர்வதேச சினிமா விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை அந்த படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘A' எனும் படத்தையும் இயக்கி வருகிறார்.

    அசுரன் இல்லை

    அசுரன் இல்லை

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் நடிப்பில் வெக்கை நாவலை மையமாக வைத்து உருவான அசுரன் திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படவில்லை. பாலிவுட்டின் சபாக், சகுந்தலா தேவி, ஷிகாரா, குலாபோ சித்தாபோ உள்ளிட்ட 27 படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்கருக்கு செல்லுமா

    ஆஸ்கருக்கு செல்லுமா

    கடந்த ஆண்டு ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் உருவான கல்லி பாய் திரைப்படம் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. வடசென்னை, சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஒத்த செருப்பு சைஸ் 7 படங்கள் தேர்வாகவில்லை. சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பரிந்துரை பட்டியலில் கூட கல்லி பாய் தேர்வாகாமல் திரும்பியது. ஜல்லிக்கட்டு படம் ஆஸ்கர் களத்தில் அசத்த வேண்டும் என்பதே இந்தியர்களின் ஒருமித்த கனவாக இருக்கிறது.

    English summary
    Mollywood film Jallikattu by Lijo Jose Pellissery enters #oscars2021 on behalf of India. 27 movies all over India participated in the selection process.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X