»   »  ஜல்லிக்கட்டு குறித்து "முரட்டுக்காளை" ஏன் வாயே திறக்க மாட்டேங்குது?

ஜல்லிக்கட்டு குறித்து "முரட்டுக்காளை" ஏன் வாயே திறக்க மாட்டேங்குது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து ரஜினிகாந்த் ஏன் மவுனமாக உள்ளார் என்பதே பலரும் கேட்கும் கேள்வி.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டை இந்த ஆண்டாவது நடத்தக் கோரி தமிழகத்தில் பேரணிகள் நடந்து வருகின்றன.

Jallikattu: Why is Murattukaalai silent?

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். திரையுலக பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

உலக நாயகன் கமல் ஹாஸன், சிம்பு, ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முரட்டுக்காளை படத்தில் காளையை அடக்குவதற்கு பெயர் போன காளையனாக நடித்த ரஜினி மட்டும் ஜல்லிக்கட்டு பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளார்.

அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Fans are eagerly expecting Rajinikanth to support Jallikattu. Superstar is maintaining silence in this issue so far.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil