twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீறின ஜல்லிக்கட்டு காளைகள்... பாய்ந்ததா சிங்கம்?

    By Shankar
    |

    தமிழகத்தில் மூன்று வருட போராட்டங்களுக்கு பின் தமிழக மக்களின் தன் எமுச்சி போராட்டம் காரணமாக நேற்றைய தினம் பாலமேட்டில் ஜல்லிகட்டு காளைகள் சீறிப் பாய்ந்தன. அதே போன்று கடந்த இரண்டு வருடங்களாக எப்போது ரீலீஸ் என தடுமாறிக் கொண்டிருந்த சிங்கம் - 3 உலகமெங்கும் ரீலீஸ் ஆனது.

    பல்வேறு பிரச்சினைகளால் முடங்கி கிடந்த சிங்கம் - 3 சினம் கொண்டு சீறும் என எதிர் பார்த்து காத்திருந்த தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் சிங்கம் - 3 படத்திற்கு தமிழகம் முழுவதும் பெரிய ஓபனிங் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சூரி என முதன் நிலை நட்த்திரங்கள் நடிப்பில் சிங்கம் 1, 2 படங்களை இயக்கிய ஹரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பான சிங்கம் - 3 அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டிருந்தது.

    Jallikkattu bulls and Surya's Singam 3

    தென் இந்தியாவில் ரஜினிகாந்த்துக்கு அடுத்து சூர்யா தான் வசூல் சக்கரவர்த்தி என்று சமீபத்தில் நடைபெற்ற சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தரப்பிலேயே கூறப்பட்டது. முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகும் மொக்கையான படங்களுக்குக் கூட ரசிகர் மன்ற பேனர்கள், ஆரவாரமான ரசிகர் கூட்டம் என முதல் நாளில் தியேட்டர்களில் களை கட்டும். கல்லா நிறையும். படம் சரியில்லை என்றால் திங்கட் கிழமைக்கு பின்னரே வசூல் குறையும்.

    நடிகர் சூர்யாவுக்கு என ரசிகர் கூட்டம் தமிழகத்தில் இருந்தும் ஓபனிங் இல்லாதது ஏன் என தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்த போது, "சூர்யா படங்களுக்கு இருக்க வேண்டிய ஒபனிங் இல்லை. அடுத்தடுத்த காட்சிகளில் வசூல் கூடி இருப்பது உண்மைதான். ஆனால் இது ஆரோக்கியமான வசூல் இல்லை. பல தேதிகள் அறிவிக்கப்பட்டு படம் வரவில்லை என்பதால் ரசிகர்களிடம் வழக்கம் போல படம் வராது என்ற நினைப்பும், மன சோர்வுக்கும் ஆளாகி விட்டனர்.

    சூர்யா பீட்டாவுக்கு ஆதரவானரோ என்று ஆரம்பத்தில் கிளப்பிவிட்டுவிட்டனர். ஆனால் சூர்யாவோ பீட்டா மீதே வழக்குத் தொடர்ந்து மன்னிப்பும் கேட்க வைத்தார். இது மெதுவாகத்தான் இளைஞர்கள், மாணவர் மத்தியில் பரவியது. இதைவிட பெரிய பாதிப்பு, படம் போலீசுக்கு ஆதரவாக இருப்பது. இளைஞர்களும் மாணவர்களும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதி நாளில் போலீசார் அரங்கேற்றிய கொடூர வன்முறையை அத்தனை சீக்கிரம் மறந்துவிடத் தயாராக இல்லை என்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில்.

    இளைஞர், மாணவர்கள் மத்தியில் ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின் மெளனமாக கருத்து மாற்றங்கள் ஏற்பட்டு இந்திய பண்பாடு, தமிழ் கலாச்சாரங்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றுக்கு எதிராக எந்த நடிகர் இருந்தாலும் வசூல் பாதிக்கும் என்கின்றனர் தியேட்டர் வட்டாரங்களில். இனியாவது தாங்கள் நடிக்கும் விளம்பரபடங்களின் உண்மை தன்மை அறிந்து நடிகர் நடிகைகள் நடிப்பது நல்லது. குறிப்பாக தமிழக இயற்கை வளங்களை, பண்பாட்டு தளங்களை சேதாரப்படுத்தும் நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிப்பதை தமிழ் திரையுலகினர் தவிர்ப்பது நல்லது என்கின்றனர் விநியோக வட்டாரங்களில்.

    சூர்யாவின் படங்கள் முதல் நாள் சுமார் 15 கோடி வசூலாகும். சிங்கம் - 3 முதல் நாள் வசூல் சுமார் 9 கோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள். ரூ 16 கோடிக்கும் மேல் வசூலாகும் என்கிறது தயாரிப்பு தரப்பு. அநேகமாக சக்சஸ் பிரஸ் மீட் வைத்தாலும் வைப்பார்கள். உண்மையில் அந்த வசூலைத் தாண்டினால் சந்தோஷம்.

    - ராமன்

    English summary
    Opening week box office report of Surya's Singam 3
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X