ஜமா பட ஹீரோ ஜமாய்க்கிறாரே.. பாரி இளவழகனின் புது பட பூஜை போட்டாச்சு.. ஹீரோயின் யாரு தெரியுமா?

சென்னை: ஜமா படத்தை இயக்கி நடித்து ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த பாரி இளவழகன் அடுத்து இயக்கி நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டு அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிகை ரோஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2024ம் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமான பாரி இளவழகன் தமிழ் சினிமாவில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

Jama Hero Pari Elavazhagan new movie pooja happened NEEK fame Ramya Ranganathan onboard
Photo Credit:

பாட்டில் ராதா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் ஜமா ஹீரோ ஸ்கோர் செய்திருந்தார். இந்நிலையில், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜமா பட ஹீரோவின் புதுப்படம்: தெருக்கூத்து கலைஞராக ஜமா படத்தில் நடித்தும் அந்த படத்தை இயக்கியும் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த பாரி இளவழகன் மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோவின் 7வது தயாரிப்பு படத்தை இயக்கி நடிக்க உள்ளார். அந்த படத்தின் பட பூஜை போடப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்துக்கு பரத் சங்கர் இசையமைக்க உள்ளார்.

Jama Hero Pari Elavazhagan new movie pooja happened NEEK fame Ramya Ranganathan onboard
Photo Credit:

நீக் பட நடிகை: மேலும், பாரி இளவழகனுக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் எனும் இளம் நடிகை இணைந்துள்ளார். இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என கூலி ரஜினிகாந்த் ஸ்டைலில் யோசிக்க ஆரம்பித்ததும் தனுஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் 'கோல்டன் ஸ்பேரோ' பாடலில் பிரியங்கா மோகனனையே ஓவர்டேக் செய்து ஆட்டம் போட்ட அதே ரம்யா ரங்கநாதன் தான் என்பது தெரிந்ததும் ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகியுள்ளனர்.

ரோஜா செல்வமணி: காவலன் படத்தில் விஜய்க்கு மாமியராகவும் அசினுக்கு அம்மாவாகவும் ரோஜா செல்வமணி நடித்த நிலையில், விஜய் சொன்னதை கேட்டு சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்றே விலகிய ரோஜா செல்வமணி இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜமா படத்தை போல எக்ஸ்பீரிமெண்ட் படமாக இது இருக்குமா? அல்லது குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை போல ஃபீல் குட் படமாக இருக்குமா என்பது அடுத்தடுத்த அப்டேட்களில் தெரியவரும். இந்த 2026ம் ஆண்டு பாரி இளவழகனுக்கு வெற்றியாண்டாக அமையட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X