காதலை புதுப்பித்த சிம்பு, ஹன்சிகா?: இயக்குநர் ட்வீட்டால் கிளம்பிய பேச்சு

By Siva

சென்னை: மஹா பட இயக்குநர் ஜமீல் போட்ட ட்வீட்டால் சிம்புவும், ஹன்சிகாவும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது.

ஹன்சிகாவின் 50வது படம் மஹா. அந்த படத்தை யு.ஆர். ஜமீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் அதுவும் 30 நிமிடங்களுக்கு மேல் வருகிறார். அதிலும் குறிப்பாக ஹன்சிகாவின் காதலராக நடிக்கிறார்.

இந்நிலையில் ஜமீல் போட்ட ஒரு ட்வீட்டால் ரசிகர்கள் வேறுவிதமாக பேசத் துவங்கியுள்ளனர்.

ஜமீல்

மஹா படத்தில் சிம்பு, ஹன்சிகா சேர்ந்து வரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுமாறு எஸ்.டி.ஆர். ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஜமீல் வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது, சிம்பு, ஹன்சிகா ரசிகர்கள் அமைதியாக இருங்கள். அந்த மேஜிக்கல் ஜோடியின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் #hansika50 #STR #Simbu என்று தெரிவித்துள்ளார். சிம்பு விமானியாக நடிப்பதால் அந்த லுக்கை பார்க்க ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

சிம்பு

சிம்பு

இயக்குநர் ஜமீல் போட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, சிம்புவும், ஹன்சிகாவும் நடந்ததை எல்லாம் மறுந்துவிட்டு தங்களின் காதலை புதுப்பித்துள்ளதாக பேசத் துவங்கியுள்ளனர். ஹன்சிகாவுடனான காதல் பிரிய தான் காரணம் அல்ல என்று சிம்பு முன்பு தெரிவித்திருந்தார். மேலும் இந்த காதல் முறிந்ததில் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்

காதல்

ஒரு படத்தில் நடிக்கும் ஜோடியை ஜமீல் ஜோடி என்று கூற ரசிகர்களோ அவர்கள் நிஜத்தில் ஒன்று சேர்ந்துவிட்டதாக நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். சிம்புவை தனக்கு காதலராக நடிக்க வைக்குமாறு ஹன்சிகாவே இயக்குநரிடம் பரிந்துரை செய்துள்ளார். அதனாலும் ஹன்சிகா, சிம்பு ஒன்று சேர்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

படம்

படம்

அப்படியே சிம்புவும், ஹன்சிகாவும் காதலை புதுப்பித்திருந்தால் அதை அவர்களே தெரிவிப்பார்கள். அதுவரை அமைதியாக இருப்போம். இருவருமே அவரவர் படங்களில் பிசியாக உள்ளனர். சிம்பு மஃப்டி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. சிம்புவை வைத்து மாநாடு படத்தை துவங்க வெங்கட் பிரபு காத்திருக்கிறார். இதற்கிடையே இப்படி ஒரு காதல் பேச்சு கிளம்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X