பாய்கிறார், பறக்கிறார் பாண்ட்... நாளை வருது நோ டைம் டு டை டிரைலர்.. காத்திருக்கும் ரசிகர்கள்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: நோ டைம் டு டை என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தின் டிரைலர், நாளை வெளியாக இருப்பதை அடுத்து ஆக்‌ஷன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

பாண்ட் பட வரிசைகளில் அடுத்ததாக வர இருப்பது, நோ டைம் டு டை. டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

 JAMES BOND’s NO TIME TO DIE Trailer release on wednesday

தொடர்ந்து நான்கு பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரேக், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார் முதலில். இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதித்தார் கிரேக்.

படத்தை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டோனி பாய்ல் (danny boyle) இயக்குவதாக இருந்தது. பாண்ட் கேரக்டர் இறப்பது போன்ற கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார் பாய்ல். காரணமாக, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஹீரோவை அப்படி சாகடிக்கக் கூடாது என்றார் ஒரு ரசிகனாக. மறுத்தார் திரைக்கதை ஆசிரியர். படத்தில் இருந்து வெளியேறிவிட்டார், ரோசக்கார பாய்ல்.

பின்னர் கேரி ஜோஜி புகுனகாவை இயக்குனராக்கியது தயாரிப்பு. இவர், சின் நோம்ப்ரே, ஜேன் ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய படங்களை இயக்கியவர்.

டைரக்டர் பஞ்சாயத்து, கிரேக் மறுப்பு, ஷூட்டிங்கில் விபத்து என இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட தடங்கல்கள். இது அத்தனையையும் மீறி, குறித்த நேரத்தில் இல்லாமல் கொஞ்சம் தள்ளியே ரிலீஸ் ஆகிறது, இந்த பாண்ட் படம். அதாவது அடுத்த வருடம் ஏப்ரல் 8-ல் ரிலீஸ் ஆகிறது.

இதற்கிடையே இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு ஆசை காட்டியிருக்கிறது. இதிலும் வழக்கம் போல பாண்ட், பாய்கிறார், ஓடுகிறார், சண்டை போடுகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஆக்ரோஷ டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பாண்ட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள், இந்த டீசரைக் காண.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X