Avatar Fire and Ash: கேமரா கொடுங்க ராஜமெளலி.. வாரணாசி படத்துல வேலை செய்றேன்.. அவதார் இயக்குநர் ஜாலி!

ஹைதராபாத்: உலகளவில் பிரம்மாண்ட சினிமாக்களை கொடுத்த முக்கிய ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி ஆகிய இருவரின் பார்வையில் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் பற்றிய கலந்துரையாடல் வீடியோ வைரலாகி வருகிறது.

உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் இணைந்து 'அவதார்' திரைப்படத்தின் அடுத்து வெளிவரவிருக்கும் பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' பற்றி கலந்துரையாடினர். உங்க அவதார் பார்த்து குழந்தையா மாறிட்டேன் என ராஜமெளலி சொல்ல, பதிலுக்கு என் கிட்ட கேமரா கொடுங்க செகண்ட் யூனிட் டைரக்டரா வேலை செய்றேன் என ஜேம்ஸ் கேமரூன் பேசியதெல்லாம் எபிக்.

James Cameron and SS Rajamouli fun banter for both Avatar Fire and Ash and Varanasi movies
Photo Credit:

ஜேம்ஸ் கேமரூன் - ராஜமெளலி உரையாடல்: கதைசொல்லலின் நுணுக்கங்கள், தனிப்பட்ட படைப்பாற்றல் திறன் மற்றும் பட வெளியீட்டின்போது ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து இரண்டு இயக்குநர்களும் வெளிப்படையாக உரையாடினர். உலகளாவிய அரங்கில் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யும் இரண்டு அற்புதமான இயக்குநர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இந்த உரையாடல் உதவியது.

ஒரு குழந்தையை போல: காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தை பார்த்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டபோது திரையரங்கில் தான் ஒரு குழந்தையைப் போல குதூகலித்ததாக எஸ்.எஸ். ராஜமெளலி கூறினார்.

ஹைதராபாத்தில் உள்ள ஐமாக்ஸில் 'அவதார்' திரைப்படம் ஒரு வருடம் ஓடியது என்ற நினைவுகளை பகிர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி, பெரிய திரை அனுபவங்களுக்கு 'அவதார்' திரைப்படம் ஒரு மைல்கல் என்றும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை பாராட்டினார்.

James Cameron and SS Rajamouli fun banter for both Avatar Fire and Ash and Varanasi movies
Photo Credit:

உங்க வாரணாசி செட் பார்க்க ஆசை: இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் எஸ்.எஸ். ராஜமௌலியின் சினிமா பார்வையைப் பாராட்டியதோடு உங்களோட வாரணாசி பட ஃபிலிம் செட்டை பார்க்க வேண்டும் என்றும் நீங்கள் எப்படி புலிகளை வைத்து படம் பிடிக்கிறீர்கள் என்பதை காண ஆசை என தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும், என் கிட்ட கேமரா கொடுங்க செகண்ட் யூனிட் டைரக்டரா வேலை செய்றேன் என ஜேம்ஸ் கேமரூன் பேசியதை பார்த்த ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆகியுள்ளனர்.

அவதார் 3ம் பாகம் வருது: 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தை 20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் வரும் டிசம்பர் 19 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் 3டி, 2டி மற்றும் ஐமேக்ஸ் வடிவில் வெளியிடுகிறது. இப்போதே இந்திய ரசிகர்கள் அவதார் 3ம் பாகத்தை பெரிய திரையில் காண ஆர்வம் செலுத்தி அட்வான்ஸ் புக்கிங் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X