ரூ.900 முதல் ரூ.1500 வரை விற்கப்படும் அவதார் 2 படத்தின் டிக்கெட்... ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : அவதார் 2 படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில், அப்படத்தின் டிக்கெட் விலை ஏகத்திற்கு உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.
ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவதார் படத்தை கேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார்.

ஜேம்ஸ் கேமரூன்
டைட்டானிக், தி டெர்மினேட்டர் மற்றும் டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே போன்ற பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரித்த கனேடிய திரைப்பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் 1500 கோடி ரூபாய் செலவில் அவதார் திரைப்படத்தை இயக்கி இருந்தார். தனி உலகத்தில் வாழும் அவதார்களை கண்காணிக்க அனுப்பப்படும் ஹீரோ, அவர்கள் இடத்தை ஆக்கிரமிப்பதை எதிர்த்து அவதார்களுடன் சேர்ந்து வெல்வதே கதை.

அவதார்
இப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்களுக்கான மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது மட்டுமில்லாமல், அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி மெய் சிலிர்க்க வைத்தது.

அவதார்: தி வே ஆப் வாட்டர்
இதையடுத்து, அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 160 மொழிகளில் டிசம்பர் மாதம் 16ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

அதிக விலையில் டிக்கெட்
அவதார் 2 அடுத்த மாதம் வெளியாக உள்ளதால், படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கி உள்ளது. இப்படத்தின் டிக்கெட் விலை ரூ.900 முதல் ரூ.1500 வரை விற்கப்படுவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவதார்: தி வே ஆப் வாட்டர் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வசூலை வாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து பாகங்கள்
டைட்டானிக் படத்தில் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் என பலரும் அதில் நடித்துள்ளனர். அவதார் தொடரின் மூன்றாவது படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என்றும், நான்காவது பாகம் 2026ம் ஆண்டு, ஐந்தாம் பாகம் 2028ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











