மெய்சிலிர்க்கும் காட்சிகள்..மாயாஜால உலகம்.. மிரட்டலாக வெளியானது அவதார் 2 டிரைலர்!

வாஷிங்டன் : அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டிரைலர் வெளியானது.

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.

ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவதார் படத்தை கேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன்

டைட்டானிக், தி டெர்மினேட்டர் மற்றும் டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே போன்ற பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரித்த கனேடிய திரைப்பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் 1500 கோடி ரூபாய் அளவில் அவதார் திரைப்படத்தை இயக்கி இருந்தார். தனி உலகத்தில் வாழும் அவதார்களை கண்காணிக்க அனுப்பப்படும் ஹீரோ அவர்கள் இடத்தை ஆக்கிரமிப்பதை எதிர்த்து அவதார்களுடன் சேர்ந்து வெல்வதே கதை.

அவதார்

அவதார்

இப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்களுக்கான மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது மட்டுமில்லாமல், அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி மெய் சிலிர்க்க வைத்தது.

அவதார்: தி வே ஆப் வாட்டர்

அவதார்: தி வே ஆப் வாட்டர்

இதையடுத்து, அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 160 மொழிகளில் டிசம்பர் மாதம் 16ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

மெய்சிலிர்க்க வைத்த டிரைலர்

மெய்சிலிர்க்க வைத்த டிரைலர்

இந்நிலையில், அவதார்: தி வே ஆப் வாட்டர் படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி உள்ளது. தண்ணீரை மையமாக வைத்து வெளியாகி உள்ள டிரைலர் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கடலில் வாழும் உயிரினங்களையும், கனிம வளங்களையும், பாதுகாக்கும் நவி இன மக்கள் குறித்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. டைட்டானிக் படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் என பலரும் அதில் நடித்துள்ளனர்.

அவதார் 5 பாகங்கள்

அவதார் 5 பாகங்கள்

இந்த படத்தின் டீசர் கடந்த மே மாதம் வெளியாகி 24 மணி நேரத்தில் 148 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. கிராபிக்ஸ் காட்சிகள் இவை என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. அவதார் தொடரின் மூன்றாவது படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என்றும், நான்காவது பாகம் 2026ம் ஆண்டு, ஐந்தாம் பாகம் 2028ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X