ஹாலிவுட்ல படம் பண்ணனும்னா சொல்லுங்க பண்ணலாம்.. ராஜமெளலியை உற்சாகப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆர்ஆர்ஆர் பட இயக்குநர் ராஜமெளலியுடன் அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பேசிய 3 நிமிட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. உலகின் உச்சியில் நீங்க இருக்கீங்க என ராஜமெளலியை ஜேம்ஸ் கேமரூன் அந்த வீடியோவில் பாராட்டி உள்ளார்.

சர்வதேச அங்கீகாரத்தை வெல்ல மீண்டும் தனது குழுவுடன் ஹாலிவுட்டில் முகாமிட்டுள்ளார் இயக்குநர் ராஜமெளலி.

நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என ஒவ்வொரு அடியாக அவர் மட்டும் எடுத்து வைக்காமல் இந்திய சினிமாவில் சிஜி தொழில்நுட்பத்தையும், பாக்ஸ் ஆபிஸ் மார்க்கெட்டையும் உயர்த்தி வருகிறார்.

ஆஸ்கர் கனவு

ஆஸ்கர் கனவு

ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரு ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். ஆனால், இதுவரை ஒரு இந்திய படம் கூட இதுவரை ஆஸ்கர் விருதை வெல்லவில்லை. சலாம் பாம்பே, மதர் இந்தியா மற்றும் அமீர்கானின் லகான் உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் நாமினி என்கிற அந்தஸ்த்தை அடைந்துள்ளன. இந்த ஆண்டு நிச்சயம் ஒரு ஆஸ்கர் விருதை ஆவது ஆர்ஆர்ஆர் வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அவதார் பட இயக்குநர் பாராட்டு

அவதார் பட இயக்குநர் பாராட்டு

ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய ராஜமெளலியை டைட்டானிக், அவதார், அவதார் 2 படங்களை இயக்கிய ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் நடைபெற்ற கிரிட்டிக் சாய்ஸ் விருது விழாவில் சந்தித்த போது பாராட்டி பேசிய 3 நிமிட வீடியோ காட்சியை தற்போது ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

2 முறை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்

2 முறை பார்த்த ஜேம்ஸ் கேமரூன்

இயக்குநர் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தை 2 முறை பார்த்ததாக ஜேம்ஸ் கேமரூனின் மனைவியும் இயக்குநருமான சூசி அமீஸ் கேமரூன் சொல்ல மெய் சிலிர்த்து விட்டார் ராஜமெளலி. மேலும், நீங்க இப்போ டாப் ஆஃப் தி வேர்ல்ட்ல இருக்கீங்க உங்க நாட்டு மக்களின் சுதந்திரம், உணர்ச்சிகளை படமாக கொடுத்து இருக்கீங்க இங்கே கிடைக்கும் அங்கீகாரம் உங்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ் தான் என படத்தையும் இயக்குநர் ராஜமெளலியின் உழைப்பையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

ஹாலிவுட்ல படம் பண்ணனும்னா

கடைசியாக ராஜமெளலியின் காதருகே சென்று ஹாலிவுட்ல படம் பண்ணனும்னா சொல்லுங்க நான் உதவி பண்றேன் என்றே ஜேம்ஸ் கேமரூன் சொல்லி இருப்பது ராஜமெளலிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் தனது படத்தை பாராட்டியதும் இதை விட வேறு எந்த விருதும் எனக்கு பெரியதல்ல என ராஜமெளலி சொல்லும் காட்சிகள் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் அந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ஜேம்ஸ் கேமரூனுக்கும் காசு கொடுத்தாரா

ஜேம்ஸ் கேமரூனுக்கும் காசு கொடுத்தாரா

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் ரேஸில் செல்ல பல கோடிகளை ராஜமெளலி செலவு செய்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் ட்ரோல்களும் எழுப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட ஹாலிவுட் இயக்குநர்களே படத்தை பாராட்டி வரும் நிலையில், அவர்களுக்கும் ராஜமெளலி காசு கொடுத்து பேச சொன்னாரா என கேட்டு ராஜமெளலியின் ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஜனவரி 24ல் தெரிந்துவிடும்

ஜனவரி 24ல் தெரிந்துவிடும்

வரும் ஜனவரி 24ம் தேதி ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாக உள்ளது. அதில், இயக்குநர் ராஜமெளலியின் படம் நாமினேட் ஆகிறதா இல்லையா என்பது தெரிந்து விடும். பல ஹாலிவுட் மீடியாக்களும் சினிமா பிரபலங்களும் ஆர்ஆர்ஆர் படத்தை பாராட்டி வரும் நிலையில், இந்த முறை நாமினேட் ஆகி ஆஸ்கரையும் ஆர்ஆர்ஆர் வெல்லுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X