Avatar 3: ஆத்தாடி.. தலையே சுத்துதே.. அவதார் 3 படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவாகி உள்ள"அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்" படம் நாளை மறுதினம் டிசம்பர் 19ந் தேதி தியேட்டரில் வெளியாகி உள்ளது. கேமரூனின் மூன்றாவது படமான இப்படம் $400 மில்லியனுக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் "அவதார் 3" படமும் இணைந்துள்ளது.

அவதார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் 2022 ஆம் ஆண்டு வெளியானது. உலகளவில் அதிகம் வசூலை அள்ளிய திரைப்படமாக 160 மொழிகளில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து, அவதார் படத்தின் மூன்றாம் பாகம் Avathar Fire And Ash என்ற பெயரில் தயாராகி உள்ளது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Avatar 3 James Cameron budget 3
Photo Credit:

அவதார் 3: பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் தயாரிப்புச் செலவு மட்டும் $300 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும், தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது, விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்ற பணிகளை சேர்த்து படத்தின் மொத்த செலவு, $400 மில்லியனுக்கும் மேலாக உள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ3,614 கோடி ஆகும். உலகிலேயே மிக அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் "அவதார் 3" படமும் இணைந்துள்ளது.

$400 மில்லியன்: திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: ஆன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ்" படம் உள்ளது. இந்த படம் $379 மில்லியன் செலவில் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில், ₹3,425 கோடியாக இருந்தது. அதே போல, "அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்" 356 மில்லியன் டாலரிலும், "ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்" திரைப்படம் 275 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டன. அவதார் 3 படத்தின் முந்தைய படமான "அவதார்" "தி வே ஆஃப் வாட்டர்" படம் சுமார் $350 மில்லியன் டாலர் பட்ஜெட் 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

முந்தைய படத்தை விட அவதார் 3 படத்தின் பட்ஜெட் 50 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளதால், இந்த படத்தின் வசூல், 2.5 மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. "அவதார் 3" உள்நாட்டில் $100 மில்லியன் முதல் $130 மில்லியன் வரை வசூலிக்கும் என ஆரம்பகட்டக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாரிஸில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜேம்ஸ் கேமரூன், நான்காவது பாகத்தை இயக்குநர் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X