கார் கண்ணாடி உடைப்பு.. தற்குறிகளின் வேலையா? ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம்
சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து இது தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் வசந்தன். இசையமைப்பாளர், தொகுப்பாளர், விமர்சகர் என ஜேம்ஸ் வசந்தனுக்கு பல முகங்கள் உள்ளது. அண்மையில் இளைஞர்களுடனான அரசியல் உரையாடலில் திமுகவை தான் ஆதரிக்க என்ன காரணம் திமுக சமூக நீதியை கட்டமைத்துள்ளது. சமூக நீதியின் அடையாளமாக உள்ளது. '
விஜய் சினிமாவில் ஊழல் செய்துள்ளாரா இல்லையா? என்று கேள்வி எழுப்ப, அதற்கு அங்கு வந்த இளைஞர்கள் ஆமாம் என்று கூறினர். உடனே சினிமாவில் ஊழல் செய்தவர் அரசியலில் மட்டும் ஊழல் செய்யாமல் இருப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் அந்த உரையாடலில் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஏப்ரல் 26ஆம் தேதி மதியம் உணவு சாப்பிட ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ள ஜேம்ஸ் வசந்தன், " தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் நான் ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றபோது" என்று பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் நீலாங்கரை காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பலரும் விவாதித்துக் கொண்டு இருப்பது ஜேம்ஸ் வசந்தன் பயன்படுத்திய வார்த்தைகளான தற்குறி என்ற வார்த்தையைத் தான். இணைய வாசி ஒருவர், " ஜேம்ஸ் இந்த கேவலமான செயல் குறித்து வருந்துகிறேன். இது தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தோல்விக்கு பிறகு வரும் என்று எதிர் பார்த்தேன். ஆனால் இது முன்னதாகவே நிகழ்ந்து விட்டது. இது தான் அவர்களின் வளர்ப்பு. கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள தெம்பில்லாத கோழைகள் கொண்ட கூட்டம். கெட்ட வார்த்தைகளை உபயோகித்து தான் பதிவு போடுவார்கள். ஆனால் பதில் தெரியாது" என்று பதிவிட்டுள்ளார். பலரும் இது விஜய் ரசிகர்களில் யாரோ தான் செய்திருக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலரோ விஜய் ரசிகர்கள் மீது பழி போட யாராவது இப்படி செய்திருக்க கூடும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications