ரஜினி படத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமில்லைனு சொன்ன பிரபலம்.. சும்மா இருப்பார்களா ரசிகர்கள்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தற்போது டாக் ஆப் த சிட்டியாக இருக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்க, சுந்தர் சி- இயக்குவதாக இருந்த படம் தலைவர் 173. இந்த படத்தின் அறிவிப்பு எல்லாம் சிறப்பாக வெளிவந்தது. அதன் பின்னர் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவிக்க, இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்படி இருக்கும்போது பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரைக் குறிப்பிடாமல், இன்னமும் அது என்ன படம் என்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரது கமெண்ட் செக்‌ஷனில் தங்களது ஸ்டைலில் பதிலளித்து வருகிறர்கள்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், " ஒருவழியாக நேற்று 'மோனிகா' பாட்டைக் கேட்டு விட்டேன். ஓரிரு மாதங்கள் முன்பு நான் மாலையில் விளையாடப் போகும் இடத்தில் இந்த மோனிகா பாடலைப் பற்றிப் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர் நண்பர். பிறகு இன்னுமொரு இடத்தில் வேறு சிலர் இதைப் பற்றிப் பேசியதையும் கேட்டேன். நான் ஏதோ சமீபத்திய ஹிட் போல என்று நினைத்து அத்தோடு விட்டுவிட்டேன். நேற்று தற்செயலாக YouTube-ல் ஒன்றைத் தேடும்போது இந்தப் பாடலின் முகப்பு வந்தது. என் மனைவி அதை போடுங்களேன் ஒரு முறை கேட்டுப் பார்ப்போம் என்றவுடன் நானும் ரொம்ப நாள் கேட்க வேண்டும் என்று நினைத்ததை சாதித்து விட்டேன்.

James Vasanthan FB Post About He Did Not Interest on to Know Rajinikanth Movie
Photo Credit:

ஆர்வம் இல்லை: அந்தப் பெண் யாரென்று தெரியவில்லை. அதில் ஆடும் மலையாள நடிகர் மஞ்சும்மெல் பாய்ஸ் பட நடிகர் என என் மனைவி சொன்னதும் நினைவுக்கு வந்தார் அவர்.யார் இந்தப் படத்தின் இயக்குநர்? லோகேஷ் கனகராஜ் பாணியிலே 1,000 பேரை ஆட வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே பார்த்தேன். இறுதியில் அவர்தான் இயக்குநர் என்று தெரிந்ததும் நானே சிரித்துவிட்டேன். 70-களில் club dance என்று ஒரு அம்சம் எல்லா வணிக படங்களிலும் இருக்கும். அது இடையில் காணாமல் போய்விட்டு மறுபடியும் உள்ளே வந்து லோகேஷ் படங்களில் ஒட்டிக்கொண்டது வியப்புதான்! இன்னமும் அது என்ன படம் என்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

James Vasanthan FB Post About He Did Not Interest on to Know Rajinikanth Movie
Photo Credit:

ரியாக்‌ஷன்: அதன் பின்னர் கமெண்ட் செக்‌ஷனில் இந்த பாடல் கூலி படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை கண்டுபிடித்து விட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் ரஜினி ரசிகர்களில் ஒருவர், " இப்படித்தான் பாருங்க நான் கூட இளையராஜா இசையமைத்த சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் பாடலை கேட்க வேண்டும் என ரொம்ப வருஷமா wait பண்ணிட்டு இருக்கேன். என் மனைவி டிவி ஆன் செய்யும் போது, ஒருவேளை முகப்பில் வந்தால் இந்த வாரம் கேட்கலாம் என இருக்கிறேன்.... பாடல் கூட கண்கள் இரண்டால் என ஆரம்பிக்கும் என சிறு நினைவு" என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, " எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு சார்? சினிமா துறையில் இருந்து கொண்டு இப்படி ஒன்னும் தெரியாத மாதிரி பேசலாமா" என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X