twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய ஆங்கில வார்த்தை ஒன்று தவறு என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் குரூப்பிஸமும் முளைத்துவிட்டது.

    விஜய்யின் 'மாஸ்டர்'தமிழ் சினிமாவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.தயாரிப்பாளர் சிவா பேச்சு!விஜய்யின் 'மாஸ்டர்'தமிழ் சினிமாவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.தயாரிப்பாளர் சிவா பேச்சு!

    போட்டியாளர்கள் இரண்டு கேங்குகளாய் பிரிந்து கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை நாமினேட் செய்யாமல் பாதுகாத்து வந்தனர்.

    ஆவேசமான ரியோ

    ஆவேசமான ரியோ

    பிக்பாஸ் வீட்டுக்குள் குரூப்பிஸம் இருப்பதை முதலில் கூறியவர் சுரேஷ் சக்கரவர்த்திதான். ஆனால் இல்லவே இல்லை, பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஆவேசமானார் ரியோ.

    பச்சையாக தெரிந்து குரூப்பிஸம்

    பச்சையாக தெரிந்து குரூப்பிஸம்

    இதேபோல் பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு பிடித்தவர்களை காப்பாற்றவும் கேப்டனாக்கவும், வேண்டாதவர்களை ஜெயிலுக்கு அனுப்பவும் பச்சையாக தங்களின் குரூப்பிஸத்தை காட்டினர். பல விஷயங்களில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஃவேவரிட்டிஸம் செய்தனர்.

    திருத்திய கமல்

    திருத்திய கமல்

    இந்த ஃபேவரிட்டிஸத்தை பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் ஃபேவரிஸம் என்றே குறிப்பிட்டனர். ஒரு முறை கமலே அதுகுறித்து பேசும் போது ஃபேவரிட்டிஸம் என்றார். ஆனால் அப்போதும் ஹவுஸ்மேட்ஸ் அதை உணரவில்லை. கடைசி ஃபேவரிஸம் என்றே கூறி வந்தனர்.

    விளக்கம் கொடுத்த பிரபலம்

    விளக்கம் கொடுத்த பிரபலம்

    ஃபேவரிஸம் என்ற வார்த்தையே இல்லாத போது, அவர்கள் தவறான ஒரு வார்த்தையை உச்சரித்தது சமூக வலைதளங்களில் பலரால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டு வரும் ஜேம்ஸ் வசந்தன் இதுதொடர்பாக பேசியுள்ளார்.

    ஃபேவரிட்டிஸம்தான் சரி

    ஃபேவரிட்டிஸம்தான் சரி

    அதாவது பிக்பாஸ் வீட்டில் ரொம்ப அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வார்த்தை.. சிலர் Favourism (ஃபேவரிஸம்) என்று உச்சரித்தார்கள். அது தவறு! Favouritism (ஃபேவரிட்டிஸம்) என்பதே சரி.. என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    James Vasanthan has shared a post about Favouritism. He says Biggboss house mates used words favourism is a wrong word.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X