90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
சென்னை: பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன், ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடி டிவிட்டியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு ஏராளமான பிரபலங்கள் ஃபேனாக இருந்தனர். பலரும் பிக்பாஸில் அரங்கேறிய ஒவ்வொரு நிகழ்வு குறித்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தனும் பிக்பாஸ் சீசன் 4 குறித்து தன்னுடைய கருத்தை பதிவிட்டு வந்தார்.

ஆரிக்கு ஆதரவாய்...
ரியோ முதல் ரம்யா வரை யார் யார் எப்படி என்றும் அவர்கள் பேசியது, நடந்து கொண்டது குறித்தும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்தார். பெரும்பாலும் ஆரிக்கு ஆதரவாய் இருந்து வந்தார் ஜேம்ஸ் வசந்தன்.

பாலாஜியை வெளியேற்றுங்கள்
ஆரியிடம் பாலாஜி முருகதாஸ் தரக்குறைவாக நடந்து கொண்டு போ வா என்று பேசிய போதும் பார்வையாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கடும் கண்டனம் தெரிவித்தார். குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியில் பாலாஜி போன்ற ஆட்கள் இருக்கக்கூடாது என்றும் அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

ஏ சர்டிஃபிகேட் கொடுங்கள்
மேலும் பாலாஜியை வெளியேற்றாவிட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள் என்றும் கூறினார். ஆரி பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்த ஜேம்ஸ் வசந்தன் நீ எப்படிடா இப்படி வளர்ந்த என்று வியப்பை வெளிப்படுத்தினார்.

ரம்யாவை சாடியுள்ள ஜேம்ஸ்
ஆரி வின்னராக அறிவிக்கப்பட்ட போதும் கூட தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

அதை சொல்லிடட்டுமா?
அவர் பதிவிட்டிருப்பதாவது, ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. அதை சொல்லிடட்டுமா..? என்று கேட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், குறைந்த ஈடுபாடு உள்ள மற்றும் 90 நாட்களாக ரொம்ப போரிங்காக இருந்த நபருக்கு 16 கோடி ஓட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

அதிக முறை ஜெயில்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிக முறை சுவாரசியம் குறைவு, ஈடுபாடு குறைவு என ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட நபர் ஆரிதான். பிக்பாஸ் வீட்டில் நான்கு முறை ஜெயிலுக்கு சென்றுள்ளார்.

ரம்யா கருத்து..
90 நாட்களுக்கு பிறகு கமல் எபிசோடில் பேசிய ரம்யா பாண்டியன், 90 நாட்ளுமே போரிங்காக இருந்த நபர் என்றால் அது ஆரி அர்ஜூனன்தான், அவருடைய பெயரைதான் நான் சொல்வேன் எனறார். இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று ஃபினாலேவில் இரண்டாவது நபராக ரம்யா பாண்டியன் வெளியேறினார்.
Recommended Video

மறைமுகமாக சீண்டி..
ஆனால் பதினாரரை கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆரி டைட்டில் வின்னர் ஆகிவிட்டார். இதனை குறிப்பிட்டு ரம்யாவை சீண்டியிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அவரது இந்த பதிவை பார்த்த பலரும் நீங்கள் சொல்வது சரிதான் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











