பாடகியிடம் அத்துமீறிய இசையமைப்பாளர்.. ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த இன்னொரு க்ளூ.. கைது செய்யப்படுவாரா?
சென்னை: அண்மையில் பாடகி ஒருவர் அளித்த பேட்டி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. அவர் பாடல்கள் பாடுவதை விட்டுவிட்டு, சுமார் 7 ஆண்டுகளாக ரிஷிகேஷியில் தனக்கென தனி தொழிலைத் தொடங்கி, கடும் முயற்சியால் வாழ்க்கையில் வென்றுள்ளார். அந்த பாடகி திரைத்துறையில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதற்கு காரணம், தான் பணிபுரிந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் தன்னிடம் மிகவும் அத்துமீறி நடந்து கொண்டார் என்றும், அந்த கொடூரன் தொட்ட எனது தோல்கள் எனக்கு வேண்டாம் என்று புது தோல் உருவாக சிகிச்சை எடுத்தேன் என்றும் கூறினார்.
இவரது இந்த பேட்டி பலருக்கும் ஷாக் கொடுத்தது. மேலும் சீக்கிரமே அந்த இசையமைப்பாளர் யார் என்று கூறுவேன் என்றும், ஆதாரத்துடன் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்றும் கூறினார். அந்த பாடகியின் பேட்டியால் ரசிகர்கள் பலரும் அந்த பாடகி திரைத்துறையில் பாடல்கள் பாடிக் கொண்டு இருந்தவரை, யாருடைய இசையில் அதிக பாடல்களைப் பாடி உள்ளார் என்று தேடி, அந்த இசையமைப்பாளர் காரணமா, அல்லது வேறு ஒரு இசையமைப்பாளராக இருக்குமே என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜேம்ஸ் வசந்தன் கருத்து: இப்படி இருக்கையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த பாடகியின் பேட்டியைப் பகிர்ந்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " இதைப் பெரிய அளவில் பரப்புங்கள்! இன்னொரு இசையமைப்பாளரின் பேரைக்கெடுக்கவோ, தொழில் பொறாமையாலோ அல்ல. இதில் ஸ்வாகதாவின் ஒரு கூற்றை கவனியுங்கள்."அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை இன்றும் தொடர்கிறது. பல இளம் பெண்களுக்கு இந்த அவலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

யார் அந்த் கொடூரன்: "அந்தப் பலிகள் தொடர்வதை உடனே நிறுத்தவும், பெண்கள் காப்பாற்றப்படவும் அவர் யார் என்பது உலகுக்குச் சொல்லப்பட வேண்டும். ஸ்வாகதாவை பேரைச் சொல்ல நாம் வற்புறுத்த முடியாது. ஆனால் தேவையான எல்லாக் குறிப்புகளையும் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த நேர்காணலின் கீழே உள்ள கருத்துகளில் பலரும் அவர் பெயரை ஊகித்துவிட்டனர். காவல்துறை ஒருசில நிமிடங்களில் இவரைக் கண்டுபிடித்து கைது செய்ய முடியும்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications