பஞ்சு அருணாச்சலம் இல்லைன்னா.. இளையராஜா vs வைரமுத்து மோதல்.. ஜேம்ஸ் வசந்தன் பளிச் பேட்டி!
சென்னை: இசைப் பெரியதா? மொழி பெரியதா என்கிற பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இது பொது பிரச்சனை அல்ல என்றும் இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே நடக்கும் தனிப்பட்ட பிரச்சனை மட்டும் தான் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இளையராஜா தான் வைரமுத்துவை வளர்த்து ஆளாக்கியது என சொல்வது எல்லாம் சரியான பேச்சு கிடையாது என்றும் அப்படிப் பார்த்தால் பஞ்சு அருணாச்சலம் தான் இளையராஜாவை உருவாக்கியதா? என்கிற கேள்வியையும் ஜேம்ஸ் வசந்தன் முன்வைத்துள்ளார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் நேரடியாக வைரமுத்துவை தாக்கி பேசியது மிகவும் தவறான ஒன்று என்றும் நல்ல திறமையான நபர்கள் எங்கே இருந்தாலும் எத்தனை தடை வந்தாலும் அவர்களின் கலை வெளியே தலைகாட்டி தான் தீரும் என அழுத்தம் திருத்தமாக ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார்.
மொழிதான் முகவரி: எந்த ஒரு பாடலாக இருந்தாலும் இசை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மொழியும் முக்கியம். ஆனால், ஒரு பாடலுக்கு முகவரியாக திகழ்வது மொழிதான் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. இதைதான் வைரமுத்து இந்த மேடையில்பேச முயன்றது. மேலும் அவர் எந்த இடத்திலும் இளையராஜாவை தாக்கி பேசவில்லை. ஆனால் ஒரு இடத்தில் அவர் சொன்ன அந்த அஞ்ஞானி வார்த்தை இளையராஜாவை குறிக்கும் சொல். அதனால் தான் அமரன் அப்படி கோபப்பட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
பல நாள் பகை: ஆரம்ப காலகட்டத்தில் நல்ல நண்பர்களாக இருந்த இளையராஜா மற்றும் வைரமுத்து திடீரென ஒரு பிரச்சனை காரணமாக பிரிய நேரிடுகிறது. இது அவர்கள் இருவருக்கும் உள்ள ரொம்ப நாள் தனிப்பட்ட பகை. ஆனால் இதை பொதுப் பகையாக மாற்றுவது தவறான செயல் என்றும் ஜேம்ஸ் வசந்தன் தனது பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கங்கை அமரன் பேசியது தவறு: இளையராஜா " இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலை எழுதுவதற்கு வைரமுத்துவுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்து பாடலாசிரியர் ஆகவே ஆகி இருக்க மாட்டார் என்றும் அவரை வளர்த்து விட்டதை தாங்கள்தான் என கூறுவது மிகவும் தவறான பேச்சு என தனது கருத்தை ஜேம்ஸ் வசந்தன் முன் வைத்துள்ளார்.
பஞ்சு அருணாச்சலம் இல்லைனா: கங்கை அமரன் கூற்றுப்படி பார்த்தால் பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு கொடுக்கவில்லை என்றால் அவர் இசையமைப்பாளராகவே ஆக இருக்க மாட்டார் யார் சொல்வது போல அல்லவா இருக்கிறது. திறமையானவர்கள் எப்படி இருந்தாலும் எங்கே இருந்தாலும் அவர்களது திறமை அவர்களை வெளியே கொண்டு வரும். என்னைப் பொருத்த வரையில் மொழியும் இசையும் கலந்ததுதான் பாடல். அனைத்தையும் நாம் ரசிக்க வேண்டுமே தவிர அதை சொந்தம் கொண்டாடி பிரச்சனை பண்ண கூடாது என ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார்.
ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு: வைரமுத்து மற்றும் இளையராஜா மோதல் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெடித்து வருகிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது இளையராஜாவை பந்தாட தொடங்கி உள்ளனர். கூலி படத்தின் டைட்டில் டீசருக்கு இளையராஜா அனுமதியில்லாமல் பாடலை பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











