இதுக்காகதான் அவர வெளியே அனுப்ப சொன்னோம்.. பாலாஜியின் ஃபினாலே பேச்சால் கடுப்பான பிரபலம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் பாலாஜி பேசிய பேச்சை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுப்பாகியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியார்களில் முக்கியமானவர் பாலாஜி முருகதாஸ். ஆரம்பம் முதலே டபுள் கேம் ஆடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என்று கூறி அலற விட்டார்.

சுய மரியாதையை சீண்டி
தொடர்ந்து ஹவுஸ்மேட்டுகளிடமும் பிரச்சனை செய்து வந்தார். வேல்முருகன் முதல் ஷிவானி வரை பாலாஜி சண்டை போடாத ஆட்களே இல்லை என சொல்லலாம் அந்த அளவுக்கு எல்லோரின் சுய மரியாதையையும் சீண்டி வம்பிழுத்தார்.

சனம் குறித்து சர்ச்சை பேச்சு
குறிப்பாக ஆரி மற்றும் சனம் ஷெட்டியிடம் பாலாஜி எல்லை மீறி நடந்து கொண்டார். சனம் ஷெட்டி, மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டியில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் பட்டத்தை வென்றார் என்று கூறினார்.

ரெட் கார்டு கொடுத்து..
ஆனால் அதனை விஜய் டிவி ஒளிபரப்பாமல் மூடி மறைத்துவிட்டது. பின்னர் கோர்ட் டாஸ்க்கின் மூலம் இந்த விஷயம் வெளியே வர ரெட் கார்டு கொடுத்து பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

தருதலை..
தொடர்ந்து சனம் ஷெட்டியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த பாலாஜி, அவரை தருதலை என்றும் அவளே இவளே என்றும் கூறி சண்டை போட்டார். இதை பார்த்தும் அவரை வெளியேற்றுங்கள் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன.

மற்றவர்களை தூண்டிவிட்டு
ஆனால் அவற்றையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை விஜய் டிவி நிர்வாகம். அதன் பிறகுதான் ஆரியிடம் தனது ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார் பாலாஜி. ஆரி குறித்து மற்றவர்களிடம் தவறாக பேசுவது, மற்றவர்களை தூண்டி விடுவது என இருந்து வந்தார்.

மரியாதை கெட்டுடும்..
அவையெல்லாம் வேலைக்கு ஆகாத நிலையில் தானே இறங்கிய பாலாஜி, எவ்வளவு தரக்குறைவாக பேச முடியுமோ அவ்வளவு தரக்குறைவாக ஆரியை பேசினார். நீ, போ, வா, மரியாதை கெட்டுடும்.. நீ ஒரு பேக்கு.. நீ ஒரு அடி முட்டாள் என வாய்க்கு வந்தப்படி பேசினார்.

பிபி எகிறி விட்டது
பாலாஜி ஆரியிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பார்வையாளர்கள் பலருக்கு பிபி எகிறிவிட்டது. குழந்தைகள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இப்படி மன உளைச்சலுக்கு ஆளாக்குவது சரியில்லை என்று விஜய் டிவியை விளாசினர்.

ரன்னர் அப் பாலாஜி
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிக்பாஸ் ஃபினாலேவில் ஆரி வின்னராக அறிவிக்கப்பட்டார். பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனார். இதனை தொடர்ந்து பேசிய பாலாஜி, இப்படி விளையாடியதே இந்த இடத்தில் வந்து நிறுத்தியிருக்கிறது.

திருந்த மாட்டார் போல
இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் இன்னும் தீவிரமாய் விளையாடியிருப்பேன் என்றார். அவரது பேச்சை பார்த்த பலரும், தெரிந்தேதான் எல்லாவற்றையும் செய்துள்ளார். திருந்த மாட்டார் போல என கூறி வந்தனர்.
Recommended Video

இதற்காகதான் சொன்னோம்
இந்நிலையில் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தனும் பாலாஜியின் இந்த பேச்சு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார். அதாவது, இந்த காரணத்துக்காக தான் பாலாஜியை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறினோம்.

மோசமா விளையாடியிருப்பேன்
சமூகத்திற்கு சரியான விஷயத்தை சொல்ல வேண்டும். அவர் சொல்கிறார், "அப்படி நடந்தே இந்த மேடை கிடைக்குதுன்னா இன்னமும் தீவிரமா (மோசமா) விளையாண்டுருப்பேன்!" என பாலாஜி கூறியதை குறிப்பிட்டு சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











