விஜய்யை யாரும் இவ்வளவு அட்டாக் செய்ய முடியாது.. ஜேம்ஸ் வசந்தன் இந்த அடி அடிச்சிருக்காரே

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்; இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் முழு வீச்சில் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதற்கிடையே கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையையும் சமீபத்தில் எதிர்கொண்டார். இந்நிலையில் அவர் பற்றி ஜேமஸ் வசந்தன் பேசியிருக்கும் அதிரடி கருத்துக்கள் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவில் ஃபுல் ஃபார்மில் இருந்த விஜய் ஒரு படத்துக்கு 150 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குகிறார். அவரது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால் அவரோ சினிமாவே வேண்டாம் மக்களுக்கு நல்லது செய்யப்போகிறேன் என சொல்லி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். கட்சி ஆரம்பித்ததிலிருந்து திமுகவை கடுமையாக டார்கெட் செய்து அட்டாக் செய்துவருகிறார்.

கரூர் துயர சம்பவம்: சூழல் இப்படி இருக்க உங்கள் விஜய் நா வரேன் என்கிற பெயரில் மக்களை சந்திக்க புறப்பட்டார். இரண்டாம் கட்ட பயணத்தின்போது கரூருக்கு மிக மிக தாமதமாக எந்த முன்னறிவிப்புமின்றி சென்றார். இதனால் அங்கே கூட்டியிருந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு விஜய்யின் அலட்சியம்தான் முக்கியமான காரணம் என பலரும் குற்றஞ்சாட்ட தொடங்கினார்கள்.

James Vasanthan Slams Vijay Over Political Silence Sparks Major Controversy
Photo Credit:

ஜனநாயகனுக்கும் பிரச்னை: இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்த ஜனநாயகன் படத்துக்கும் பிரச்னை வர; பொங்கல் ரிலீஸிலிருந்து படம் வெளியேறியது. எப்போது ரிலீஸாகும் என்றெல்லாம் இன்னமும் தெரியாமல் இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க கரூர் துயர சம்பவம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு சில நாட்களுக்கு முன்பு ஆஜரானார். நீண்ட நேர விசாரணையில் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசியதாக கூறப்படுகிறது.

ஜேம்ஸ் வசந்தன் அட்டாக்: இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "விஜய் ஒரு கோழை. வலுவே இல்லாத தொடை நடுங்கி. அனைவரையும் பேசவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது கொடூரமான மனநிலை. அவரது ரசிகர்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவரோ வாயே திறக்காமல் இருக்கிறார். படம் ரிலீஸாகவில்லை என்று அவரது ரசிகர்கள் போராடுகிறார்கள்.

எதுவுமே இல்லாதவர்: அவர்களுக்கு அறிவுரை சொல்லவாவது வாயை திறக்க வேண்டும். சொந்த பிரச்னைக்கே போராடாத இவர் எப்படி மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவார். மன உறுதியோ, தெளிவோ, வலிமையோ எதுவுமே இல்லாதவர் அவர்" என்றார். முன்னதாக ஜனநாயகன் படம் ரிலீஸாகததற்கு எதிராக திரைத்துறையிலிருந்து ஏகப்பட்ட குரல்கள் வந்தன. அரசியல்வாதிகள், ரசிகர்களிடமிருந்தும் கண்டன குரல்கள் வந்தன.ஆனால் விஜய்யோ வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X