Thug Life: ஆண்டவரின் தக் லைஃப் படத்தை ஆஹா.. ஓஹோ என பாராட்டும் ஜேம்ஸ் வசந்தன்.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்த தக் லைஃப் படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் , பக்ஸ் , நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான படம் படு தோல்வியைச் சந்தித்தது. அதற்கு ரசிகர்கள் பலரும் சொன்ன காரணம், படத்தின் திரைக்கதை சொதப்பல். இப்படி இருக்கும்போது, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். மேலும், அவரது விமர்சனத்தில் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டியுள்ளார்.
அவரது விமர்சனத்தில், " நேற்றிரவு 'Thug Life' படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். நல்ல படம். மிக நல்ல படம். ஆனால் ஏன் இதை சிலர் மோசமாக விமர்சித்தார்கள் என்பது எனக்கு கொஞ்சம்கூட விளங்கவில்லை. ஒரு underworld gangster படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே English மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம்; அல்லது ரசித்தது போல நடித்திருப்போம். ஒரு நல்ல படத்தின் அத்தனை அம்சங்களும் உயர்தரத்தில் இருந்தன.
ஆழமான கதை, அட்டகாசமானத் திரைக்கதை, அசரவைக்கிற locations, அதை அருமையாகக் கண்முன் கொண்டுவந்த ஒளிப்பதிவு, சர்வதேச தரத்தில் பின்னணி இசை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்கள், அவர்களின் அடக்கமான நடிப்பு, அற்புதமான ஒலிக்கலவை, படத்தை விறுவிறுப்பாக்கிய படத்தொகுப்பு என எல்லாமே ஒருசேர அசத்திய கலவை. ஒரு காட்சிகூட சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வியப்பு!

சிம்பு - கமல்: முடிவை பலவிதத்தில் சிந்தித்துப் பார்த்தேன். சிம்புவின் கதாபாத்திரம் இறக்காமல், கமல் கதாபாத்திரம் இறந்திருந்தால் எப்படியிருக்கும்? இரு கதாபாத்திரங்களும் இறந்து நாசர் கதாபாத்திரம் நிலைத்து நின்றால் எப்படியிருக்கும்? எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் சிறப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை. வெவ்வேறு உணர்வுகளோடு வெளியேறியிருப்போம், அவ்வளவுதான். இதுவரை இந்தப்படத்தைப் பார்க்காதவர்கள் போய்ப்பாருங்கள். சமூக ஊடகங்கள் அரசியலையும் கலையையும் போட்டுக் குழுப்பிக்கொள்கிற மலிவான காலகட்டத்தின் சித்து விளையாட்டுகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். மணிரத்னமும் கமல்ஹாசனும் ரஹ்மானும் ரவி K சந்திரனும் இந்தியாவுக்குக் கிடைத்த வரங்கள்" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
த்ரிஷா கதாபாத்திரம்: தக் லைஃப் படத்திற்கு இவர் அளித்துள்ள விமர்சனத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட்டில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர் ஒருவர், " த்ரிஷா கேரக்டர் இந்த படத்தில் தேவையே இல்லை. அது இல்லாமல் வெறும் Gangster கதையாக மட்டும் இருந்திருந்தாலே average விமர்சனம் வாங்கி இருக்கும்" என கமெண்ட்டில் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு: அதேபோல், மற்றொருவர், " சார் இவர்கள் இந்த படத்தை ரசிப்பார்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு காரணம் இவர்களின் அறியாமை தான். அலைபாயுதே என்ற திரைப்படம் கொண்டாடப்பட்டது, ஆனால் அதே போன்று ஒரு சிறிய கருத்துடன் வந்த காற்று வெளியிடை படம் தோல்வியுற்றது. காரணம், இன்றைய சமூக வலைதளங்களும் தேவையற்ற விமர்சனங்களும் தான் எவ்வளவு மோசமான திரைப்படமாக இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு வாரம் திரையரங்கில் இருக்கும்.

தேவையற்ற விமர்சனங்கள்: ஆனால் இப்பொழுதெல்லாம் முதல் காட்சி முடிந்த பிறகு தேவையற்ற விமர்சனங்களால் திரை அரங்கை நோக்கி மக்கள் செல்வதை தவிர்க்கிறார்கள். கண்டிப்பாக இந்த படமும் கொண்டாடப்படும், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு. உதாரணமாக ஆயுத எழுத்து திரைப்படத்தை அப்போதைய சூழலில் யாரும் பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஆனால் இப்பொழுது அந்த படத்தை இணையதளத்தில் அதிகமாக பார்க்கிறார்கள். மணிரத்னம் என்பவர் பின் நாட்களில் வரக்கூடிய பல விஷயங்களை தன் படத்தில் வைத்து அதை மக்களிடத்தில் கொண்டு செலுத்துவார். ஆனால் இந்த மக்கள் அதைப் புரிந்து கொள்ளும் தன்மையில் இதுவரை இல்லை" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











