மீண்டும் இணைகிறதா "ஜன கன மன" படத்தின் கூட்டணி!?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி.
தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து சரிவர அதனை நடித்து ரசிகர்களை ஈர்ப்பவர் ஜெயம் ரவி.
தற்போது ஜெயம் ரவி "ஜன கன மன" படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவையான விமர்சனம்
இந்த ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் பொங்கலன்று நேரடியாக OTT யில் வெளியான பூமி திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதை தொடர்ந்து இயக்குனர் அஹ்மத் இயக்கும் "ஜன கன மன" படத்தில் ஜெயம் ரவி நடித்து வந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார்.

பொன்னியின் செல்வன்
இதுமட்டுமின்றி ஜெயம் ரவிக்கு கைவசம் மணிரத்னம் இயக்கும் "பொன்னியின் செல்வன்" திரைப்படம் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று
அதுபோலவே "ஜன கன மன" படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நின்றுள்ளது. மீதமுள்ள படத்தை படக்குழு வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் அங்கும்
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
Recommended Video

இந்தியாவில் படப்பிடிப்பு
இந்நிலையில் ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. மீண்டும் இணையவுள்ள படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க இந்தியாவில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் "ஜன கன மன" படத்திற்கு முன்னரே இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











