ஜன நாயகன் வில்லன் என்னம்மா வெறித்தனமா கிரிக்கெட் விளையாடுறாரு.. CCL 2025ல கலக்கப்போறாரு!
மும்பை: பாலிவுட்டில் மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார் பாபி தியோல். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான அனிமல் படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. இதேபோல தமிழிலும் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தில் வில்லனாக களமிறங்கியிருந்தார் பாபி தியோல்.
இந்தப் படம் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பாபி தியோலுக்கு பெற்றுத் தந்து வருகிறது.அடுத்ததாக நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக உருவாகிவரும் தளபதி 69 படத்திலும் பாபி தியோல்தான் வில்லன். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் இவரது கேரக்டரும் பேசப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் பாபி தியோல்: நடிகர் பாபி தியோல் பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம்வந்தவர். தற்போது பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்துவரும் பாபி தியோல் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான அனிமல் படத்திலும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் பாபி தியோலின் கேரக்டரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதேபோல தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பாபி தியோல். கடந்த ஆண்டில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல் நடித்திருந்த கங்குவா படம் வெளியாகி அவருக்கு சிறப்பாக அமைந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாபி தியோலுக்கு மிகப்பெரிய கவனத்தை பெற்றுத் தந்துள்ளது.
தளபதி 69 பட வில்லன்: கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக உருவாகிவரும் தளபதி 69 படத்திலும் பாபி தியோல்தான் வில்லன். அரசியல் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் இவரது கேரக்டரை ஹெச் வினோத் எப்படி அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜையிலும் விஜய், பூஜா ஹெக்டேவுடன் பாபி தியோலும் பங்கேற்றிருந்தார். இதனிடையே, சினிமா மட்டுமில்லாமல் தான் அனைத்து விஷயத்திலும் மாஸ் தான் என்று நிரூபித்து வருகிறார் பாபி தியோல்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2025: நாளை முதல் துவங்கவுள்ளது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள். இதில் மும்பை ஹீரோஸ் அணிக்காக விளையாடவுள்ளார் பாபி தியோல். கடந்த ஆண்டிலும் இந்த போட்டிகளில் விளையாடினார் பாபி தியோல். இதனிடையே, அவரது அடுத்தடுத்த கலக்கல் பர்ஃபார்மென்சின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரருக்கான உற்சாகத்துடன் பாபி தியோல் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியதை பார்க்க முடிகிறது. ஒரு கேட்சை பிடித்தபோது, குழந்தைக்கான உற்சாகத்துடன் அவர் சக போட்டியாளர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை கைத்தட்டி பகிர்ந்து கொண்டதையும் இந்த வீடியோ மூலம் பார்க்க முடிகிறது.
கிரிக்கெட்டால் கிடைத்த பட வாய்ப்பு: தன்னுடைய சிறு வயதிலேயே தான் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க மிகுந்த ஆர்வம் கொண்டதாக அவர் தன்னுடைய முந்தைய பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்த சிசிஎல் மூலமாகவே அனிமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த போட்டியின்போது அவர் சக போட்டியாளரை தீவிரமாக பார்த்ததை பார்த்த அனிமல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா,அந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே தனக்கு பேட்டிங் செய்யத் தெரியாது என்றும் ஆனால் பந்து வீச்சு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறப்பான பந்து வீச்சு: மேலும் தான் முதல் முறையாக மைதானத்திற்கு சென்ற போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும் பாபி தியோல் தன்னுடைய பேட்டியில் பகிர்ந்திருந்தார். நாம் வெளியில் இருந்து பார்த்துவிட்டு, இந்திய அணி வீரர்கள் ஏன் சரியாக பேட்டிங் செய்யவில்லை, ஏன் பந்தை தடுக்கவில்லை என்று பலவாறாக விமர்சிப்பதை குறிப்பிட்ட அவர், மைதானத்திற்கு சென்ற பின்பே அதை செய்வது எவ்வளவு கடினம் என்பதை தான் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆயினும் அவர் சிறப்பான பந்து வீச்சை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இந்த சீசனிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











