Jana Nayagan: ஜன நாயகன் சென்சார் பிரச்னை தீர்ந்ததா?.. புதிய ரிலீஸ் தேதி இப்படி தீயா பரவுதே!

சென்னை: கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் ஜூலை மாதமே வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி தளபதி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மாதம் இப்படித்தான் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 19ம் தேதி ஜன நாயகன் வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டன. கடைசியில் பிம்பிளிக்கா பிலாப்பி போல மாறிவிட்டதே என சில ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நம்ப மாட்டோம் என உறுதியாக உள்ளனர்.

Jana Nayagan aims for July 17th release with A Certificate buzz trending
Photo Credit:

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்தும் ரிலீஸ் தேதி குறித்தும் பரவி வரும் தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஜன நாயகன் சான்றிதழ்: முதலமைச்சராக விஜய் மாறிய நிலையில், கேவிஎன் தயாரிப்பாளருக்கும் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஜன நாயகன் சென்சார் பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த வார இறுதிக்குள் 'ஏ' சான்றிதழ் வழங்க தணிக்கை குழு முடிவு செய்துள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகளவிலான ரத்தக் காட்சிகள், மதம் மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளிட்டவை உள்ள நிலையில், ஏ சான்றிதழ் உடன் ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு சம்மதித்துள்ள நிலையில், சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவும் ரெடியாகி விட்டதாக கூறுகின்றனர்.

ஜன நாயகன் ரிலீஸ் தேதி: மேலும், வரும் ஜூலை 17ம் தேதி ஜன நாயகன் திரைப்படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார இறுதிக்குள் சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டால் ஜூலை 17ம் தேதி ஜன நாயகன் வெளியாகும் என்கின்றனர். ஆனால், இதுவரை கேவிஎன் நிறுவனம் ஜன நாயகன் ரிலீஸ் தேதி குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜய்யின் கடைசி படம் என்பதால், படம் எப்போது வெளியானாலும் தியேட்டர்களில் திருவிழா கொண்டாட்டம் தான் என தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X