விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கிறாரா மோகன் ஜி.. எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்லி இருக்காருனு பாருங்க

சென்னை: நடிகர் விஜயின் கடைசி படமாக உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மட்டும் படக்குழு சுமார் 80 கோடிகள் வருவாய் பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ள பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் சிலர், மோகன் ஜி தேவையில்லாமல் விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மாலை நடைபெறவுள்ளது. ரசிகர்கள் பலரும் மலேசியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்றுவிட்டார்கள். மலேசியாவில் உள்ள ரசிகர்கள் பலரும் டிக்கெட்டுகளை புக் செய்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். படக்குழுவினர் ஏற்கனவே மலேசியாவில் முகாமிட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Jana Nayagan Audio Launch Director Mohan G Post About Ajith Which Is Triggers Vijay Fans

ரசிகர்கள் எமோஷனல்: தளபதியின் கடைசி படம் என்பதால் அவரது பேச்சு, குட்டி கதை உள்ளிட்டவற்றுக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தளபதியை இது போன்ற மேடையில் பார்க்க முடியாது என்ற எண்ணம் மேலும் ரசிகர்களை எமோஷனலாக மாற்றி உள்ளது. இப்படி இருக்கையில், நடிகர் அஜித் குறித்து இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவானது, விஜய் ரசிகர்களை சீண்டும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எக்ஸ் பக்க பதிவு: அதாவது மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்தின் ரேஸ் புகைப்படத்தை பகிர்ந்து, " மலேசியானு பாத்தாலே தல தான் ஞாபகத்திற்கு வருகிறார். பில்லா, குட் பேட் அக்லி" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு மற்ற நாட்களில் பதிவிட்டிருந்தால் அஜித் மீதான பிரியத்தின் வெளிப்பாடு என்று பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் இன்றைக்கு மலேசியாவில் விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்போது, மோகன் ஜி பதிவிட்டுள்ள இந்த பதிவு, விஜய் ரசிகர்களை சீண்டுவதற்காகத்தான் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Jana Nayagan Audio Launch Director Mohan G Post About Ajith Which Is Triggers Vijay Fans

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X