அம்மா பாடிய பாடல்.. பூஜா ஹெக்டேவிடம் குழந்தை போல் குதூகலித்த விஜய்.. மனுஷன் செம க்யூட்!

சென்னை: மலேசியாவில் நேற்று நடந்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாதான் கோலிவுட்டின் ஹெட் லைன்ஸாக மாறியிருக்கிறது. விஜய்யின் பேச்சு, சிறப்பு விருந்தினர்களின் பேச்சு என அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்யின் தாய் ஷோபா; சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலை பாடினார்.

ஜனநாயகன் படத்தின் ரிலீஸுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ; அதேபோல் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் ஹைப் இருந்தது. எந்த விஜய் படத்தின் ஆடியோ லான்ச்சாக இருந்தாலும் இந்த ஹைப் எழுவது வழக்கம்தான் என்றாலும்; இதுதான் அவரது கடைசி பட இசை வெளியீட்டு விழா என சொல்லப்பட்டிருந்ததால்; தங்களது தளபதியை, அண்ணனை, தலைவரை காண்பதற்கு விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மலேசியாவுக்கு படையெடுத்தார்கள்.

விஜய்யின் தெறி ஸ்பீச்: இந்த விழாவில் விஜய் அவருடைய நண்பர் அஜித் மாதிரி கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாக வந்திருந்தார். ஆடியோ வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் நடந்த கான்செர்ட்டை ரசித்து பார்த்த அவர்; மேடையேறி பல விஷயங்களை பேசினார். அந்தப் பேச்சில் மறைமுகமாக அரசியலும் இருக்கத்தான் செய்தது. அதேபோல் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தனது பேச்சில் உணர்த்தினார்.

Jana nayagan Audio Launch Highlights Vijay s Speech Emotional Fans amp amp Mother Shoba Steals the Show
Photo Credit:

எமோஷனல் ஆன ரசிகர்கள்: இனிமேல் விஜய்யை சினிமா தொடர்பான மேடைகளில் பார்க்க முடியாது. அரசியல் மேடைகளில் மட்டுமே பார்க்கலாம். இதையெல்லாம் மனதில் வைத்து அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் எமோஷனல் ஆனார்கள். விஜய் பேச பேச ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன், சத்தம், கமெண்ட்ஸ் என அத்தனையும்; விஜய் என்ற நடிகர் தமிழ்நாட்டு மக்களிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்; இத்தனை வருடங்களாக எப்படி அங்கமாக இருந்திருக்கிறார் என்பதையும் பறை சாற்றின.

தந்தை உருக்கம்: இந்த விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டார். அவரும் தன் பங்குக்கு பேசிவிட்டு; 'விஜய்யை கட்டியணைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. விஜய் நீ ரொம்ப தூரத்தில் இருக்க. என்னால் அவ்வளவு தூரம் நடந்துவர முடியாது' என கூற; உடனே விஜய் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மேடைக்கு ஓடி சென்று; தனது தந்தையை இறுக அணைத்துக்கொண்டார். அது பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஷோபா பாடிய பாடல்; குதூகலித்த விஜய்: அதேபோல் விஜய்யின் தாயும், பின்னணி பாடகியுமான ஷோபா நேற்று நடந்த கான்செர்ட்டில் சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலை பாடினார். அப்போது விஜய் தனக்கு அருகில் இருந்த பூஜா ஹெக்டேவிடம், ஷோபாவை நோக்கி கை காண்பித்து, 'அவங்க என்ன அம்மா' என குழந்தை போல் குதூகலித்து சொன்னார். இதனை பார்த்த மைதானத்தில் இருந்தவர்கள் கரகோஷத்தால் அதிர வைத்தார்கள். அதுமட்டுமின்றி எவ்வளவு வளர்ந்தாலும் இவ்வளவு க்யூட்டாக இருக்காரே தளபதி என்றும் மெய் சிலிர்த்தார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X