Jana Nayagan: விஜய்க்கு கன்டிஷன் போட்ட மலேசியா.. என்னங்க இப்படி ஆகிப்போச்சு.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இப்படி இருக்கும்போது மலேசியா அரசு தரப்பில் விஜய்க்கு ஒரு முக்கியமான கண்டிஷன் போடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் இந்த இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய இசைக்கச்சேரியே படக்குழு நடத்தவுள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது நடிகர் விஜய் அரசியல் பேச அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Jana Nayagan Audio Launch Malaysia Govt Produce Some Conditions To Vijay For His Speech

விஜய்: ஏற்கனவே தனது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் மறைமுகமாக சில அரசியல் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அது குறித்த விவாதங்களும் நடைபெற்றுள்ளது. இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ளதால், அரசியல் பேசுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் அதைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கன்டிஷன்: இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் தனது ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் கருத்துக்கள் எதுவும் பேசக்கூடாது என்று மலேசியா அரசு கன்டிஷன் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்த தகவல் இந்த நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்று டிக்கெட் வாங்கிக் கொண்டு ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ள ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Jana Nayagan Audio Launch Malaysia Govt Produce Some Conditions To Vijay For His Speech

பிரபலங்கள்: வரும் 27ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினருடன் தமிழ் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். படத்தில் நடித்துள்ள இயக்குநர்களான நெல்சன் திலீப்குமார், அட்லீ, லோகேஷ் கனகராஜ் என மூவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X