தளபதி திருவிழா மலேசியாவில் நடக்க திமுகவின் சதிதான் காரணமா? இணையத்தில் கம்பு சுத்தும் விஜய் ரசிகர்கள்
சென்னை: விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் தான் தொடங்கினார் ஆளும் திமுகவை மேடைக்கு மேடை, பதிவுக்கு பதிவு விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை கூட கடுமையாக விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், விஜய் திமுகவை தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருகிறார். இதன் விளைவாக, அவரது ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளுமே எதற்கு எடுத்தாலும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, இது திமுகவின் சதி என்று விமர்சித்து வருகிறார்கள்.
தவெக நடத்தும் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏடாகூடமான பதில் கொடுத்து, சமூக வலைதளங்களில் ட்ரோல்களை எதிர்கொள்ளும் விஜய் ரசிகர்களையே, திமுக செட் செய்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் என்று விமர்சிக்கும் அளவுக்கு இருக்கிறார்கள். ஆளும் திமுகவை எதிர்த்து தான் அரசியலில் களமாடுவது சரிதான் என்றாலும், ஆதாரத்துடன் விமர்சனங்களை முன் வைக்காமல், வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லிக் கொண்டு இருப்பது தவெகவின் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது என்ற பதில் விமர்சனம் திமுக தரப்பில் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

திமுக சதி?: இப்படி இருக்கும்போது, ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்க திமுகவின் சதிதான் காரணம் என்று இணையத்தில் கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அதாவது, நேரு ஸ்டேடியம் இசை வெளியீட்டு விழாவுக்கு வேண்டும் என்று கேட்டபோது, அந்த தேதியில் பராசக்தி படக்குழு புக் செய்து விட்டனர் என்றும், வேறு தேதியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இதையடுத்து தான் படக்குழு மலேசியாவுக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவை மாற்றி விட்டார்களாம். ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவுக்கு மாற்றப்பட்டதும், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரிக்கு மாற்றப்பட்டுவிட்டதாம். இது திமுகவின் திட்டமிட்ட சதி என்று கம்பு சுத்தி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள் சிலர்.
ரியாக்ஷன்: விஜய் ரசிகரின் இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் கமெண்ட் செக்ஷனில் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஏன் வேறு தேதியில் கேட்கலாமே என்றும், வேறு இடத்தில் நடத்தலாமே என்றும், வேறு மாவட்டத்தில் நடத்தி இருக்கலாமே என்றும், வேறு மாநிலத்தில் கூட நடத்தி இருக்கலாமே என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











