மலேசியாவுல போய் மானத்த வாங்கிடாதீங்க தளபதி ஃபேன்ஸ்.. ஜன நாயகன் ஆடியோ லான்ச் கட்டுப்பாடுகள்!
மலேசியா: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப்பெரிய இசைக் கச்சேரியாக நடைபெறவுள்ளது. வரும் சனிக்கிழமை, அதாவது டிசம்பர் 27ஆம் தேதி, இந்த ஆண்டின் கடைசி சனிக்கிழமை இந்த பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கு ஏற்கனவே சில நிபந்தனைகளும் தடைகளும் மலேசியா அரசு விகித்த நிலையில் தற்போது கூடுதலாக சில விதிமுறைகளையும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்து உருவாகி உள்ள ஜன நாயகன் படம் அவரது கடைசி படம் என்பதால், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. அனிருத் இசையில் உருவாகி உள்ள அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தளபதி திருவிழா என்ற பெயரில் இசை கச்சேரி நிகழ்ச்சியாகவும் நடைபெறவுள்ளது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளார்கள். நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தவெக: நடிகர் விஜய் அரசியல் கட்சித் தலைவர் என்பதால், அவர் இந்த இசை நிகழ்ச்சியில் அரசியல் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்க கூடாது என்று மலேசியா காவல்துறை அவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இப்படியான நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், விஜய் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் விதித்துள்ளனர். '

தடை: அதாவது இசை நிகழ்ச்சிக்கு வரும் விஜய் ரசிகர்கள் எக்காரணம் கொண்டும் அரசியல் கட்சி தொடர்பான பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார்கள். மீறி கொண்டு வந்தால் அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். உதாரணத்திற்கு, தவெக கொடி, டீ-சர்ட், தலையில் கட்டும் பேண்ட், துண்டு, மஃப்ளர், குடை, பேட்ச், கை விறிசி உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்லி இருந்தாலும், மலேசியா அரசின் வழிகாட்டுதலின் பேரிதால் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்று சிலர் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் சில ஆர்வக்கோளாறு விஜய் ரசிகர்கள் இது திமுகவின் சதி என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











