ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா.. தண்ணீர் பாட்டிலுடன் விளையாடும் அனுராதா - கிரிஷ்.. ஜாலி வீடியோ

மலேசியா: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் ஜன நாயகன் படக்குழுவினர் மட்டும் இல்லாமல், திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக விஜய் படத்தில் இடம்பெற்ற பல பாடல்களை நாளை அரங்கேற்றம் செய்ய உள்ளதால், இந்த இசை வெளியீட்டு விழா என்பது ஒரு இசைக் கச்சேரி போல நடக்கவுள்ளது. இப்படி இருக்கும்போது, பாடகர்கள் கிரிஷ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் ஆகியோர், நிகழ்ச்சி நடக்க உள்ள மேடையில் விளையாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விஜயின் 69 வது மற்றும் கடைசி படம் ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தெலுங்கு படமான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் படம் என்று கூறப்படுகிறது.

பிரமாண்ட நிகழ்ச்சி: இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, தளபதி திருவிழா என்ற பெயரில் விஜய்க்கு ஃபேர்வெல் பார்ட்டி வைக்கும் விதமாக படக்குழு ஏற்பாடு செய்துள்ள இசை நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கு விஜய் உடன் இணைந்து பணியாற்றிய பல நடிகர்கள், இயக்குநர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Jana Nayagan Audio Launch Singers Anuradha Sriram And Krish Funny Time Playing Video
Photo Credit:

ஜாலி வீடியோ: இப்படி இருக்கும்போது இந்த இசை நிகழ்ச்சியில் பாடல்கள் பாடச் சென்றுள்ள பாடகர்களான கிரிஷ் மற்றும் அனுராதா ஸ்ரீராம், நாளை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, இருவரும் தண்ணீர் பாட்டிலை வைத்து விளையாடினர். இது தொடர்பான வீடியோவை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் அனுராதா ஸ்ரீராம் இருப்பதால், நாளைக்கு அப்படி போடு பாடல் இருப்பது உறுதி போலயே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X