மொத்த மலேசியாவுமே தல அஜித்துடையதுதான்.. ஒப்புக் கொண்ட தளபதி விஜய்.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?
மலேசியா: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜய் பேசிய, பாடியது, நடனமாடியது, குட்டி கதை சொன்னது உள்ளிட்ட பலவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது என்ற தகவல் வெளியானதில் இருந்து பலரும் கேட்டு வந்த கேள்வி நடிகர் அஜித் கலந்து கொண்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்பதுதான்.
அஜித்தின் கார் ரேஸ் அணியும் மலேசியாவில் தான் இருக்கிறது என்பதால் இந்த எதிர்பார்ப்பு பெரிய அளவுக்கு எகிறியது. ஆனால் அஜித் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. இப்படி இருக்கும்போது விஜய் தனது பேச்சியில், அஜித் பெயரையும் அவரது பில்லா படத்தின் பெயரையும் குறிப்பிட்டு பேசினார்.

அஜித் பெயரைச் சொன்ன விஜய்: விஜய் பேசுகையில், " சில படங்களின் பெயர்களை சொன்னாலே மலேசியா தான் நியாபகத்துக்கு வரும். அப்படி நமது நண்பர் அஜித்தின் பில்லா படத்தைக் கூறலாம்" என்று பேசினார். விஜய் இவ்வாறு சொன்னதும் மொத்த அரங்கும் ஆரவாரம் செய்தது. ஏற்கனவே விஜய் மலேசியாவுக்கு சென்றதும், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற டயலாக்கான மொத்த மலேசியாவும் அவருடையது ( அஜித்) தான் என்ற டயலாக்கை அதிகம் பகிர்ந்து வந்தனர். அஜித் நடிப்பில் உருவான பில்லா படம் கடந்த 2007ஆம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் பில்லா படம் கடந்த 1980ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் உருவாகி வெளியான பில்லா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் படங்கள்: இந்த இசை வெளியீட்டு விழாவில் அஜித்தின் மூன்று படங்களின் பெயர்கள் திரையில் வீடியோவாக காட்டப்பட்டது. அதாது ஜன நாயகன் படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என மூன்று படங்களை இயக்கி உள்ளார். இது மட்டும் இல்லாமல், ஜன நாயகனுக்கு முன்னதாக அவர் இயக்கிய ஐந்து படங்களின் பெயர்களும் ஹெச். வினோத்திற்காக உருவாக்கப்பட்ட ஏ.வியில் இடம் பெற்றிருந்தது.


Click it and Unblock the Notifications











