எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்கு நான் சினிமாவை விட்டு கொடுக்கிறேன் - விஜய் எமோஷனல் பேச்சு
மலேசியா: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படி இருக்கும்போது நடிகர் விஜயின் பேச்சு மற்றும் அவரது குட்டிக்கதையை நேரடியாக கேட்கத்தான் லட்சக்கணக்கான ரசிகர்கள் மலேசியாவின் புக்கட் ஜலீல் மைதானத்தில் கூடி உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசுகையில் பல எமோஷனலான எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது அவரது ரசிகர்களை ரொம்பவும் எமோஷனலாக டச் செய்துள்ளது.
விஜய்க்கு முன்னதாக பேசிய பலரும் விஜய் அரசியலுக்கு சென்றாலும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய் அந்த கோரிக்கைக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் பேசி உள்ளார்.

விஜய் பேச்சு: குறிப்பாக அவர் பேசுகையில், " முதல் நாளில் இருந்தே என்னுடன் பயணிக்கும் எனது ரசிகர்கள். அவர்கள் ஏதோ, ஒன்று இரண்டு நாட்கள் எனக்காக நிற்கவில்லை, கடந்த 33 ஆண்டுகளாக எனக்காக பல இடங்களில் நின்றுள்ளார்கள். அதனால் தான் நான் இன்றைக்கு இங்கு நிற்கிறேன். எனக்காக 33 ஆண்டுகளாக அவர்கள் நின்றார்கள், அடுத்த 30, 33 ஆண்டுகளுக்கு நான் அவர்களுக்காக நிற்கப் போகிறேன்.
நன்றிக்கடன்:எனக்கு ஒன்னு என்றால் ரசிகர்கள் தியேட்டரில் நிற்கிறார்கள். இனி அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டில் நிற்பேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி சொல்லிட்டு போறவன் கிடையாது, நன்றிக்கடன தீர்த்துட்டு போறவன்." என்று எமோஷனலாக பேசினார். இவரது இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மைதானமே அதிரும் அளவுக்கு ஆரவாரம் செய்தனர்.


Click it and Unblock the Notifications











