Jana Nayagan Audio Launch: கட்சி கொடிக்குத்தானே தடை.. TVK.. TVK.. என அரங்கம் அதிர கத்தும் ரசிகர்கள்

மலேசியா: விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா கோலாலம்பூரில் உள்ள புக்கட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி விஜய்க்கு ஃபேர்வெல் பார்ட்டி போல நடப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் திரண்டுள்ளனர். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி உள்ளதால், இந்த இசை வெளியீட்டு விழாவில் கட்சி சார்ந்த எந்த பொருட்களும் இருக்க கூடாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் மைதானத்தில் TVK.. TVK.. என அரங்கம் அதிர கத்தி வருகிறார்கள்.

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடத்தலாம் என்று படக்குழு சுமார் 5 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்து, மலேசியா அரசிடம் அனுமதி எல்லாம் வாங்கிவிட்டது. விஜய் அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பதால், விஜய் மேடையில் பேசும்போது அரசியல் கருத்துக்கள் எதுவும் பேசக்கூடாது. தனது படம் குறித்தும் திரை வாழ்க்கை குறித்து பேசிக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். அதன் பின்னர் நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, துண்டு, தொப்பி, டீ சர்ஸ், பேட்ச், குடை உள்ளிட்ட எதையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

Jana Nayagan Audio Launch Vijay Fans Chant TVK TVK Continuously Video Goes Trending

ரசிகர்கள் அலப்பறை: இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்டைக் கொடுத்தாலும், விவரம் தெரியாத சில விஜய் ரசிகர்கள் இந்த தடைக்கும் திமுக தான் காரணம் என்று இணையத்தில் விமர்சித்து வந்தனர். இப்படி இருக்கும்போது மலேசியா அரசு சொன்ன எல்லா விதிமுறைகளையும் பின்பற்றி, கட்சி சார்ந்த எந்த பொருளும் இல்லாமல் வந்த ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதித்து வந்தனர்.

கத்திய ரசிகர்கள்: விஜய் ரசிகர்கள் தளபதி.. தளபதி.. என்று கத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் மைதானத்திற்குள் வந்ததும், TVK.. TVK.. என அரங்கம் அதிர கத்தத் தொடங்கி விட்டனர். இது தொடர்பான தகவல்களை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் கட்சி கொடி, துண்டு, பேட்ச், டீ சர்ட் உள்ளிட்டவற்றிக்குத்தானே தடை போட முடியும். நாங்கள் TVK.. TVK.. என கத்தினால் உங்களால் என்ன செய்ய முடியும் என்று மலேசியா அரசை நோக்கி கேட்பது போல கத்தி வருகிறார்கள். இது தொடர்பான தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X