Jana Nayagan: விஜய்யைப் பார்த்து நாளைக்கு நீங்களும் CM தான் என்று பாடிய அம்மா ஷோபா சந்திரசேகர்
மலேசியா: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படி இருக்கும்போது நடிகர் விஜயின் அம்மா இந்த நிகழ்ச்சியில் பாடல் பாடினார். அப்போது விஜய் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டு இருந்தார். குறிப்பாக ஏழைங்க பாழைங்க நினைச்சுப்புட்டா நாளைக்கு நீங்களும் CM-மு தான் என்று பாடிய போது விஜய் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்க்கு ஃபேர்வெல் பார்ட்டி நடத்தும் விதமாக அவரது படத்தில் இடம்பெற்ற பல பாடல்களை அரங்கேற்றம் செய்தனர். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம் பெற்ற மேகமாய் வந்து போகிறேன் பாடலில் தொடங்கிய இந்த இசைக் கச்சேரி, அதன் பின்னர் கடைசியாக கில்லி படத்தில் இடம்பெற்ற பாடலான, அப்படி போடு பாடலுடன் முடிந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜயின் அப்பா மற்றும் அம்மா இருவரும் கலந்து கொண்டனர். அதேபோல் விஜயின் அம்மா ஷோபா அடிப்படையில் பாடகர். இப்படி இருக்கும்போது, அவர் விஜயின் சிவகாசி படத்தில் இடம் பெற்ற, கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாரியா என்ற பாடலை பாடினார். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளான, " ஏழைங்க பாழைங்க நினைச்சுப்புட்டா நாளைக்கு நீங்களும் சிஎம்மு தான்" என்ற வரிகளைப் பாடினார்.
ரசிகர்கள் ஆரவாரம்: இந்த வரிகளை ஷோபா பாடும்போது, விஜய் மிகவும் சிரித்த முகத்துடன் காணப்பட்டார். ரசிகர்கள் அந்த வரியை மட்டும் மிகவும் அழுத்தம் திருத்தமாக பாடினார்கள். விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருவதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் இவரது கட்சி வெற்றி பெற்று, விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார் என்று அவரது கட்சியினர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களில் ஒரு பகுதியினர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: இதன் வெளிப்பாடாகத்தான், ரசிகர்களின் ஆரவாரம் வெளிப்பட்டுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் விஜயின் மனைவி சங்கீதா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொள்ளாதது பலர் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











