Jana Nayagan Audio Launch: தங்கமே தளபதி.. ரசிகர்கள் பட்டாளத்துக்கு மத்தியில் மாஸாக நடந்து வந்த தளபதி

மலேசியா: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் மட்டும் இல்லாமல் தமிழ் திரைப் பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மைதானத்திற்கு வந்த தளபதி விஜய், மேடையில் அமைக்கப்பட்டிருந்த மிகவும் நீளமான நடைபாதையில் நடந்து சென்று ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரத்தில் தளபதி தளபதி என்று ஆர்ப்பரித்தனர்.

தளபதி விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விஜயின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என விஜய் என்ற ஒற்றை மனிதரைப் பார்க்க, அவருக்கு சிறப்பான ஃபேர்வெல் பார்ட்டி கொடுக்க மலேசியாவில் ஒன்று கூடி உள்ளனர்.

Jana Nayagan Audio Launch Vijay Walks Between Fans Which is Like Totally Massive Cinema Scene

ரசிகர்கள் கொண்டாட்டம்: நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேசக்கூடாது, விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சி சம்பந்தமான பொருட்களை எடுத்து வரக்கூடாது என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதனால் தவெக தொடர்பான பொருட்களை தவிர்த்தாலும், ரசிகர்கள் மைதானத்தில் TVK.. TVK.. TVK.. என்று தொடர்ந்து கத்திக் கொண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும்போது நடிகர் விஜயின் வருகைக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள். இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், முதல் பாடலாக, மேகமாய் வந்து போகிறேன் பாடலில் தொடங்கி, அப்படி போடு அப்படி போடு பாடல் வரை என பாடகர்கள் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தனர்.

மாஸாக நடந்து வந்த விஜய்: இப்படி இருக்கும்போது, தளபதி விஜய் மைதானத்திற்கு முன்னரே வந்துவிட்டாலும், ரசிகர்களை சந்திக்க இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொடங்கும்போதுதான் வந்தார். வந்தவர் நேராக மேடையில் ஏறி, ரசிகர்களை நோக்கி கையசைத்தார். மேலும், மேடையில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் ரசிகர்களை நோக்கி கையசைத்தபடி நடந்து சென்றார். மேலும் ரசிகர்களை நோக்கி, பறக்கும் முத்தங்களை சிரித்தபடி பறக்கவிட்டார். விஜயின் இப்படியான நடவடிக்கைகளைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் தளபதி... தளபதி.. என்று கத்தினர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களை புல்லரிக்கச் செய்துவிட்டது.

Jana Nayagan Audio Launch Vijay Walks Between Fans Which is Like Totally Massive Cinema Scene

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X