ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாசிரியர் யாரு தெரியுமா?.. ஆடியோ லாஞ்ச் மலேசியாவில் இந்த தேதியிலா?
சென்னை: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது.
கரூர் சம்பவம் காரணமாக ஜனநாயகன் படத்தின் அறிவிப்புகள் கடந்த மாதம் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில், இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் உடன் ஜனநாயகன் ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு யாரு லிரிக்ஸ் எழுதியது என்பது குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கும் கேவிஎன் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
தளபதி கச்சேரி: கோட் படத்திலேயே பார்ட்டி ஒன்ன தொடங்கட்டுமா என விஜய் பாடிய பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அதனை தொடர்ந்து தவெக கட்சியை தொடங்கி திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் அடுத்த அரசியல் களத்தில் போட்டியே என கர்ஜித்துள்ளார். அனிருத் இசையில் விஜய் பாடிய தளபதி கச்சேரி பாடல் இன்று ரிலீஸ் ஆகும் நிலையில், ரசிகர்கள் காலை முதலே தளபதி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அறிவு லிரிக்ஸ்: அனிருத் இசையில் தளபதி விஜய் பாடும் இந்த "தளபதி கச்சேரி" பாடலுக்கு மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடலை எழுதிய தெருக்குரல் அறிவு லிரிக்ஸ் எழுதியுள்ளார். கண்டிப்பாக அவருடைய ராப் போர்ஷன் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த பாடல் கண்டிப்பாக "நான் ரெடிதான் வருவா" பாடல் போல ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் ஆடியோ லாஞ்ச்: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ லாஞ்ச் நடைபெற அனுமதி கிடைக்குமோ? கிடைக்காதோ? என்கிற சர்ச்சைகள் உள்ள நிலையில், மலேசியாவில் இந்த முறை இசை வெளியீட்டு விழாவை நடத்த விஜய் திட்டம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











