கருப்பு ரெக்கார்ட் காலி.. ஜெட் வேகத்தில் ஜன நாயகன் டிக்கெட் புக்கிங்.. முதலிடத்தில் முதல்வர் விஜய்!

சென்னை: சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் முதல் நாள் டிக்கெட் புக்கிங்கை விட விஜய்யின் ஜன நாயகன் டிக்கெட் புக்கிங் அதிகரிக்க வாய்ப்பே இல்லை என சூர்யா ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் நேற்று ட்ரோல் செய்து வந்த நிலையில், பிவிஆர் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களின் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த நிலையில், விஜய் ரசிகர்கள் சாதனை சம்பவங்களை ஸ்டார்ட் செய்துள்ளனர்.

மொத்த படமும் சில மாதங்களுக்கு முன்பே ஹெச்டி தரத்தில் லீக்காகி சுமார் 1.2 கோடி பேர் பார்த்து விட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ள நிலையிலும், விஜய் ரசிகர்கள் தியேட்டரில் வழக்கம் போல விஜய் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தே தீருவோம் என டிக்கெட் புக்கிங்கை அடித்து நொறுக்கி சாதனை படைத்து வருகின்றனர்.

Jana Nayagan beats Karuppu in Day 1 Book My Show Ticket Sales

தவெக தொண்டர்களும், அமைச்சர்களும் களத்தில் குதித்து வசூல் சாதனையில் ஜன நாயகன் படத்தை எந்த நிலையிலும் பின் தங்க விடமாட்டோம் என டிக்கெட்டுகளாக வாங்கிக் குவித்து முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் சாதனையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நம்பர் ஒன் விஜய் தான் என்பதை நிரூபிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பேரே வரலாறு: எம்ஜிஆருக்குப் பிறகு சிவாஜி முதல் கமல் வரை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வந்தாலும் ரஜினிகாந்த் வருவதாக அறிவித்து பின்னர் பின் வாங்கிய நிலையில், என் மக்களுக்காக நான் வரேன் என அறிவித்து விட்டு சினிமாவையும் உதறித் தள்ளிவிட்டு கட்சித் தொடங்கி 2 ஆண்டுகளில் பெரிதாக ஓட்டுக்கு காசு கொடுக்காமல் 234 தொகுதிகளிலும் உங்க விஜய் தான் நிக்குறேன் எனச் சொல்லி 233 தொகுதிகளில் தவெக போட்டியிட்டு திமுக, அதிமுகவை விட அதிக இடங்களில் வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் சினிமா சிம்மாசனத்தை விட்டு இறங்கி கோட்டையில் உள்ள நிஜ சிம்மாசனத்தில் அமர்ந்து வரலாறு படைத்துள்ளார்.

கருப்பு ரெக்கார்ட் காலி: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி இதுவரை அதிக வசூலை ஈட்டி நம்பர் ஒன் இடத்தில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தான் உள்ளது. புக் மை ஷோவில் முதல் நாளில் அதிகப்படியாக 7 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்தது. விஜய்யின் ஜன நாயகன் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில், கருப்பு ரெக்கார்டை எல்லாம் முறியடிக்க முடியாது என ட்ரோல்கள் பறந்த நிலையில், தற்போது 7.30 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி கருப்பு படத்தை விட முந்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கருப்பு திரைப்படத்துக்கு ப்ரீ சேல்ஸ் இல்லை என்றும் ஒரு நாள் தள்ளி தான் படமே ரிலீஸ் ஆனது என விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

முதல் நாள் வசூல் கணிப்பு: விஜய் நடித்து கடைசியாக வெளியான லியோ மற்றும் கோட் உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் மேல் முதல் நாளில் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. லியோ படத்தின் 148 கோடி வசூலை ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 151 கோடி வசூல் செய்து காலி செய்தது. விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் கூலி வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமான ரிலீஸ் மற்றும் மொத்த படமும் லீக்கான நிலையில், 60 முதல் 70 கோடி வரை உலகளவில் வசூல் ஈட்டும் என கணிக்கப்படுகிறது. கருப்பு படம் இந்த ஆண்டு வசூல் செய்த 350 கோடி வசூலை ஜன நாயகன் முறியடிக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X