ஒரே நாளில் லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்.. அடேங்கப்பா அதிகாரப்பூர்வமாகவே சொல்லிட்டாங்களே!
சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகிறது. கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்னதாகவே இங்கிலாந்தில் ஜன நாயகன் படத்துக்கான முன்பதிவை அஹிம்சா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொடங்கி விட்டது. இதில், ஆச்சர்யம் என்னவென்றால், ஒரே நாளில் லியோ பட டிக்கெட் புக்கிங் சாதனையையும் ஜன நாயகன் முறியடித்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அ. வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பாபி தியோல் மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜன நாயகன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக காத்திருக்கிறது.

நேற்று ஜன நாயகன் படத்தின் 2வது பாடலான ஒரு பேரே வரலாறு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தளபதி விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் என்பதால், அந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்பவே டிக்கெட் புக்கிங் ஆரம்பம்: தொடர்ந்து தமிழ் சினிமாவின் பெரிய படங்களை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்து வருகிறது அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட். விஜய்யின் ஜன நாயகன் படத்தை யுகேவில் ரிலீஸ் செய்யவுள்ள அந்த நிறுவனம் நேற்றே ஜன நாயகன் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்து விட்டது. படம் வர இன்னும் 20 நாட்களுக்கும் மேல் உள்ள நிலையிலும், இங்கிலாந்து ரசிகர்கள் விஜய் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
லியோ ரெக்கார்டு முறியடிப்பு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வெளியான லியோ திரைப்படம் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளில் அதிகபட்சமாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆனதாகவும், அந்த சாதனை ஜன நாயகன் திரைப்படம் முறியடித்து முதல் நாளில் அதிகப்படியாக 12,700 டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாக அஹிம்சா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது.
லியோ வசூலை முந்துமா?: விஜய்யின் கடைசி படமாக வெளியாகவுள்ள ஜன நாயகன் திரைப்படத்துக்குப் போட்டியாக பிரபாஸின் ராஜாசாப் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், லியோ படத்தின் உலக வசூலை ஜன நாயகன் முறியடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கண்டிப்பாக ஜன நாயகன் படம் சிறப்பாக இருந்தால், லியோ வசூலை முந்தும். படம் சொதப்பிவிட்டால், பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடியை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











