விஜய் பிறந்தநாளுக்கும் ஜன நாயகன் வரப்போறது இல்லை.. சென்சார் எப்போ கிடைக்கும்.. வெளியான தகவல்!
சென்னை: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தை தயாரிக்க முன் வந்ததில் இருந்தே பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி ஜன நாயகன் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு, மறு தணிக்கை மற்றும் அரசியல் என சிக்கி சின்னாபின்னமாகி கடைசியில் மொத்த படமே லீக் ஆனது படக்குழுவை அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு படத்தை விட தேர்தலில் வெற்றிப் பெறுவதே முக்கியம் என விஜய் உழைத்து முதலமைச்சராகவும் மாறிவிட்டார். ஆனால், இன்னமும் ஜன நாயகன் படத்துக்கு சென்சார் கிடைக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதற்கான உண்மையான காரணத்தை படக்குழு இன்னமும் தெரிவிக்காத நிலையில், படத்திற்கான சென்சார் வரும் ஜூன் 19ம் தேதி கிடைத்து விடும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
செட்டில் செய்ய ரெடியான விஜய்: கேவிஎன் நிறுவனத்துக்கு மட்டுமின்றி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பலத்த நஷ்டமடைந்துள்ள நிலையில், பலர் வாங்கிய காசுக்கு வட்டியும் கட்டி சிக்கியுள்ளனர். இந்நிலையில், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜனநாயகன் சென்சார்: வரும் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக ஜன நாயகன் படத்துக்கான சென்சார் கிடைத்து விடும் என லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி படக்குழுவுக்கு சற்றே நம்பிக்கை கொடுத்துள்ளது. ஜன நாயகன் படம் தியேட்டரில் வந்தால் தான் பார்ப்போம் என உறுதியாக பல விஜய் ரசிகர்கள் திருட்டுத்தனமாக லீக்கான படத்தை பார்க்காமல் இன்னமும் விரதத்தை கடைபிடிக்கின்றனர். ஆனால், இந்த மாத இறுதிக்குள் படம் வெளியாகவில்லை என்றால் அவர்களும் பார்க்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். வரும் ஜூன் 19ம் தேதி சென்சார் அதிகபட்சம் கிடைத்து விடும் என்கின்றனர்.
அடுத்த வாரமே வரலாம்: இந்த வாரம் ஜன நாயகன் படத்துக்கு சென்சார் கிடைத்து விட்டால் கூட படம் அடுத்த வாரம் ஜூன் 25 அல்லது 26ம் தேதி கூட வெளியாகி விடும் என்கின்றனர். ஆனால், ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை வாரியம் ஏன் சான்றிதழ் கொடுக்க இத்தனை கால தாமதம் செய்கிறது என்கிற கேள்வியும் உண்மையான பிரச்னை என்ன? என்பதுமே ஜன நாயகன் படத்தை விட செம கதையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications