Jana Nayagan: ஜன நாயகன் சென்சாருக்கு தடை.. 21ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று செனனை உயர்நீதிமன்ற தனி நீதிபதி இன்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி உத்தரவிட்டார். இவரது இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது சென்சார் நிறுவனம். இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணை இன்று மாலை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த செனனை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வழக்கை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கும் தடை விதித்தார். இதனால் வரும் 21ஆம் தேதி வரை படம் வெளியாகாது என்பது தெளிவாகிறது. இதனால் பொங்கல் ரேஸில் இருந்து மட்டும் இல்லாமல், ஜனவரி மாதத்தில் இருந்தும் ஜன நாயகன் படம் வெளியேறுகிறது என்ற பேச்சு கோலிவுட்டில் அதிகரித்துள்ளது.

Jana Nayagan Censor Has Banned By Chennai High Court And Also Case Will Postponed To January 21st
Photo Credit:

தெலுங்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜன நாயகன் படம் என்றாலும், படத்திற்கு சென்சார் தருவதில் சில பிரச்னைகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. இராணுவச் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒரு காரணம் என்றும், OM என்ற ஆங்கில வார்த்தை ஓம் என்று இந்து மதத்தை பிரதிபலிப்பது போல இருக்கிறது என்றும், இது மத உணர்வுகளை பாதிக்கும் என்றும் ஒரு காரணம் கூறப்படுவதாக பேச்சுக்கள் அடிபட்டாலும், அறுதியிட்டுச் சொல்லும்படியான தகவல்கள் எதுவும் இல்லை.

Jana Nayagan Censor Has Banned By Chennai High Court And Also Case Will Postponed To January 21st
Photo Credit:

சென்சார் வழக்கு: இப்படி இருக்கையில் படத்திற்கு சென்சாருக்கு கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி விண்ணப்பித்திருந்தாலும், படத்திற்கு சென்சார் கிடைக்க வேண்டி, படக்குழு தொடுத்த வழக்கிற்கு இன்று அதாவது 9 ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கலாம் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து சென்சார் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை இன்றே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தார்.

உச்சநீதிமன்றம்: மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதி வரை ஒத்தி வைத்துள்ளார். இதனால் ஜன நாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து மட்டும் இல்லாமல், ஜனவரி மாதத்தில் இருந்தும் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X