Jana Nayagan: கேட்காமலே உனக்கு தர உயிர் இருக்கு.. செல்ல மகளேனு தளபதி உருகி பாடிய தாலாட்டு ரிலீஸ்
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. இப்படி இருக்கும்போது, படத்தில் இருந்து மூன்றாவது பாடலான செல்ல மகளே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
செம மெலடி பாடலாக உருவாகி உள்ள இந்த பாடலை தளபதி விஜயே பாடியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப் பட்டிருந்த இரண்டு பாடல்களில் தளபதி கச்சேரி என்ற பாடலை விஜய் பாடி இருந்தார். இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் குரலிலேயே இந்த பாடலும் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய் குரலில் பாடல் என்றாலே அது வேகமான இசையைக் கொண்ட பாடலாக அதாவது துள்ளலிசை பாடலாகத்தான் இருக்கும். ஆனால் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்திலும் தற்போது ஜன நாயகன் படத்திலும் மெலடி பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பைப் பெற்று வருகிறார். அந்த வகையில் செல்ல மகளே பாடல் செம மெலடியாக உருவாகி உள்ளதால், நாளை நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் இந்த இரண்டு பாடல்களையும் மேடையிலேயே பாடுவாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். பாடலை விவேக் எழுதி உள்ளார். இப்பாடல் மகளுக்கு தந்தை பாடும் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளதால் தளபதியின் பெண் ரசிகைகளுக்கு பெரும் ஆர்வத்தை பாடல் உருவாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











