Vijay: தமிழ் புத்தாண்டில் விஜய்யை பார்க்க குவிந்த கூட்டம்.. ஜன நாயகன் தயாரிப்பாளர் போட்ட ட்வீட்!
சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறை அதுவுமாக கோவை, அவினாசி, திருப்பூர் மக்களை சந்தித்து நேற்று விஜய் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். வழிநெடுகிலும் மக்கள் வெள்ளம் கூடி விஜய்க்கு உற்சாக வரவேற்பை அளித்த காட்சிகளை ஜன நாயகன் படத்தின் இணை தயாரிப்பாளரும் விஜய்யின் மேனேஜருமான ஜெகதீஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தி ரூட் நிறுவனத்தை நடத்தி வரும் ஜெகதீஷ் ஆரம்பத்தில் விஜய்யின் அட்மினாக இருந்தார். அதன் பின்னர், தி ரூட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மகாராஜா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

மேலும், விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர், லியோ மற்றும் ஜன நாயகன் படங்களின் இணை தயாரிப்பாளரும் இவர் தான்.
தமிழ் புத்தாண்டில் விஜய் பிரச்சாரம்: நடிகர் விஜய் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று கோவை, அவினாசி மற்றும் திருப்பூர் மக்களை சந்தித்து தவெக கட்சிக்கும் விசில் சின்னத்துக்கும் ஓட்டுப் போடுங்க எனக் கேட்டுக் கொண்டார். மேலும், திருப்பூர் மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தார். கோவையில் தான் பெருங்கூட்டம் என்று பார்த்தால் திருப்பூரில் விஜய்யின் வேன் செல்லக் கூட வழி கிடைக்காத வகையில் மக்கள் வெள்ளம் அவரை காண முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்தது.
விஜய்க்கே பயம் வந்துடுச்சு: கரூர் போல கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிடப் போகிறது என விஜய்க்கே பயம் வந்துவிட்டது. போட்டப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை தாண்டி யாரும் வர வேண்டாம் என்றும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை தானே, எல்லாரும் நலமாக இருக்கீங்களா என பலமுறை கேட்ட பிறகே தனது பேச்சைத் தொடங்கினார். போலீஸ் பாதுகாப்பு அவ்வளவு கூட்டத்தையும் சரியாக கட்டுப்படுத்தி எந்தவொரு அசம்பாவிதமும் ஆகாமல் பார்த்துக் கொண்டனர். சிலர் நீண்ட நேரம் விஜய்யை காண வெயிலில் காத்திருந்த நிலையில், மயக்கம் போட்டு விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.
ஜன நாயகன் சென்சார் இன்று கிடைக்குமா?: ஜன நாயகன் திரைப்படத்தை எப்படி ஹேக் செய்து லீக் செய்தார்கள் என்கிற விசாரணை ஓடிக்கொண்டிருக்கிறது. ஜன நாயகன் லீக் ஆகி மலேசியா முதல் பல இடங்களில் சிடி விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மேலும், பலரும் மொபைலில் படத்தை டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர். இதனால், படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் மற்றும் கேவிஎன் நிறுவனத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜன நாயகன் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சித்து வரும் நிலையில், இன்று படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டால், இம்மாத இறுதிக்குள் அல்லது மே 1ம் தேதி படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications