JANA NAYAGAN DAY 5 BOX OFFICE: வீக் எண்ட் முடிந்ததும் வீக் ஆன ஜன நாயகன்.. ஜன நாயகன் வசூல் விபரம்

சென்னை: KVN புரடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாக உருவான படம் தான் ஜன நாயகன். படத்தில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 23ஆம் தேதி வெளியானது. கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கே ரிலீஸ் ஆக வேண்டிய படம், ஏழு மாதங்கள் தாமதமாக ரிலீஸ் ஆகி மொத்த திரையரங்குகளையும் தீபாவளி கொண்டாட வைத்துள்ளது எனக் கூறும் அளவுக்கு வீக் எண்டில் வசூல் மழை பொழிந்த ஜன நாயகன், வாரத்தின் ஆரம்ப நாளான நேற்றை வசூல் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த கடைசிப் படம் ஜன நாயகன். சென்சார் பிரச்னையால் படம் வெளியாகமல் இழுத்துக் கொண்டே இருந்தது. ஒருவழியாக எல்லா பிரச்னைகளும் முடிந்து படம் ஜூலை 23ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை மிகவும் எமோஷனலாக மாற்றிவிட்டது.

JANA NAYAGAN DAY 5 BOX OFFICE Detailse Here Which Cross 233 Crores in World Wide

அதாவது இது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய்யின் கடைசி படம் எனும்போது மொத்த ரசிகர்கள் பட்டாளம் மட்டுமல்லாமல் மொத்த திரையுலகமுமே அவருக்கு சிறப்பான செண்ட்- ஆஃப் கொடுக்க தயாராக இருந்தது என்றாலும், தீவிர ரசிகர்களால் மிகவும் எமோஷனலாகவே இந்தப் படத்தின் ரிலீஸைப் பார்க்க முடிந்தது. அதுவும் தியேட்டரிலேயே அண்ணா... அண்ணா... தளபதி... தளபதி எனக் கத்தி கத்தி கதறி அழுத வீடியோக்களும் இணையத்தில் கவனம் பெற்றது. யாருக்குத்தான் எமோஷனலாக இருக்காது, தங்களது பால்ய காலத்தில் இருந்து இப்போது வரை வாழ்வின் மிகப் பெரிய அங்கமாக இருந்தவர் சினிமாவில் இனி நடிக்கப்போவது இல்லை என்று கூறிவிட்டு, இனி எது என்றாலும் அரசியல் தான் என்று அரசியல் கவனம் செலுத்துகிறார். அவரை முதலமைச்சராக்கி அழகு பார்த்தாலும், திரையில் அவரைக் கொண்டாடுவதற்கு இணையாக எதுவும் இல்லை என்று கண்ணீருடன் சொல்லும் ரசிகர்கள் அதிகம்.

சட்டவிரோத லீக்: இப்படி இருக்கையில் படம் ஏற்கனவே இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆகி கிட்டத்தட்ட ஒரு கோடியே 20 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட விட்டது என்று சைபர் கிரைம் காவல்துறையினரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இப்படி இருக்கையில் படத்திற்கு எந்த அளவுக்கு வசூல் வரும் என்ற கேள்வி பலரையும் ஆட் கொண்டு வந்தது.

கப் சிப்: இந்த சந்தேகங்கள் சரி தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் முதல் நாள் ஓப்பனிங் என்பது விஜய்யின் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லை என்ற பேச்சு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் அடிபட்டது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக படக்குழுவும் முதல் நாள் வசூல் குறித்து எந்த தகவலும் வெளியிட வில்லை.

JANA NAYAGAN DAY 5 BOX OFFICE Detailse Here Which Cross 233 Crores in World Wide

ஐந்து நாள் வசூல்: இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் அதாவது ஜூலை 28ஆம் தேதியுடன் ஆறு நாட்கள் ஆகும் நிலையில், முதல் ஐந்து நாளில் படத்தின் வசூல் பலரையும் சர்ப்ரைஸ் ஆக்கி உள்ளது. வார இறுதியில் படத்திற்கு வசூல் எகிறி உள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாக் நிக் வலைதளத்தின் தகவலின் அடிப்படையில் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் 233.24 கோடிகள் வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் வார வாரத்தின் தொடக்க நாளான நேற்று அதாவது ஜூலை 27ஆம் தேதி திங்கட் கிழமை மட்டும் ரூபாய் 10.15 கோடிகள் இந்தியாவில் வசூலித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. வாரத்தின் தொடக்க நாளில் படத்தின் வசூலான மொத்தமாக குறைந்தது குறித்த பேச்சுக்கள் திரைத்துறை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X