அப்பனே முருகா.. ஜனநாயகன் வசூலை அள்ளனும்.. மலேசியா பத்துமலை முருகனை மனமுருகி வேண்டிய எச் வினோத்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவே ஸ்தம்பித்து போகும் அளவில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் எச் வினோத் மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியா மணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் ஸ்டேடியம் புக்கிட் ஜலீலில் நடைபெற்றது. மலேசியாவில் இதுவரை இப்படி ஒரு விழா நடந்ததே இல்லை என்று சொல்லும் அளவிக்கும் 80 ஆயிரம் பேர் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Jana Nayagan Vijay Director H vinod

எச் வினோத் பேச்சு: இதில் பேசிய இயக்குனர் எச். வினோத், கொஞ்சம் ஜனநாயகன் முன்னாடி பின்னாடி மாதிரி இருக்கே. உள்ள புகுந்து அடிச்சிடலாமானு நினைக்கிறவங்களுக்கும், நான் சொல்ல விரும்புறது. ஐயா இது தளபதி படம். அதனால உங்க மனசுல என்ன இருந்தாலும் அதை அழிச்சிட்டு, 100 சதவீதம் என்டர்டெய்னான படத்தை பார்க்க வாங்க. நீங்க ஆடிப்பாடி கொண்டாடுறதுக்கும், அமைதியா யோசிக்கிறதுக்கும் பல காட்சிகள் படத்தில் இருக்கு. படத்துல கடைசி 15 நிமிஷ கிளைமாக்ஸ் காட்சி மிகவும் எமோஷனல் அழுகையா இருக்கும்னு சொல்றாங்க, ஆனால், அதெல்லாம் இல்லை, அதை நீங்க படத்தை பார்க்கும் போது தான் தெரியும். படத்தோட முடிவுல நம்பிக்கை தான் இருக்கு. ஏன்னா தளபதிக்கு இது முடிவு கிடையாது. ஆரம்பம் என்று பேசினார்.

சாமி தரிசனம்: இப்படி விழாவில் அட்லீ, நெல்சன், லோகேஷ் கனராஜ், அனிருத், நாசர் என அனைவரும் மிகவும் உணர்ச்சி பொங்க பேசினார்கள். இந்த இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு நடைபெற்றது. விழா முடிந்து தளபதி விஜய் அங்கிருந்து புறப்பட்டு இருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் எச் வினோத், மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜை செய்துள்ளார். எச் வினோத்திற்கு கோவில் சார்பாக சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X