Jana Nayagan: ஜன நாயகன் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறனிடம் கேட்கும் ரசிகர்கள்.. அவரோட ரியாக்ஷன்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிய விடப்பட்டது தொடர்பாகத்தான் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக மொத்த திரையுலகமுமே பேசிக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் தமிழில் இருக்கும் மிகவும் பிரபலமான சினிமா விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். அவரிடத்தில் இணைய வாசி ஒருவர், ஜன நாயகன் படத்தின் விமர்சனம் குறித்து கேள்வி கேட்க, அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டு, நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் கதை ஏற்கனவே தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால், இயக்குநர் ஹெச். வினோத் படத்தின் மொத்த கதையில் சில மாற்றங்களைச் செய்து உருவாக்கி இருந்தார்.

படம் ஜனவரி 9ஆம் தேதியே வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் படத்திற்கான ரிலீஸ் சான்றிதழ் கிடைக்காததால், படத்தை வெளியிட முடியவில்லை. இப்படி இருக்கையில் படத்தின் ரிலீஸ் சான்றிதழ் பிரச்னை இன்னும் கிடைக்காத நிலையில் படம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 2026 குப் பிறகுதான் ரிலீஸ் ஆகும் என்று பேச்சுக்கள் எழுந்து வந்தது.
தேர்தலில் கவனம்: பலரும் ஜன நாயகன் பிரச்னையை மறந்துவிட்டு தேர்தலில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இப்படி இருக்கையில் ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் படக்குழுவினருக்கும் ஏற்படுத்தி உள்ளது. மொத்த திரையுலகமும் இதைக் கண்டித்து வரும் நிலையில் நடிகர் விஜய் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளார்.

ரியாக்ஷன: இப்படி இருக்கையில், தமிழில் இருக்கும் மிகவும் பிரபலமான சினிமா விமர்சகர்களில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். அவரிடத்தில் இணையவாசி ஒருவர், ஜன நாயகன் படத்தின் விமர்சனம் குறித்து கேள்வி கேட்க, அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இணைய வாசி, " ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆயிடுச்சு அண்ணா சட்டுபுட்டுன்னு பார்த்து ரிவியூ போட்டு விடுங்க" என்று பதிவிட, அதற்கு, ப்ளூ சட்டை மாறனோ அடேய் என்று பதில் அளித்துள்ளார். மேலும் சில இணையவாசிகள் அவங்க பங்குக்கு படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள், உங்க பங்குக்கு நீங்க விமர்சனத்தை போட்டு விடுங்க என்று பதிவிட, அதற்கு சிரிப்பது போல ரியாக்ஷன் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











