Jana Nayagan case: ஜனநாயகன் பஞ்சாயத்து தீராது போல.. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சென்னை: விஜயின் ஜனநாயகன் பட தணிக்கை சான்று தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இதனால், ஜனநாயகன் படம் வெளியாவது மேலும் தாமதமாகும்.

விஜயின் ஜனநாயகன் பட தணிக்கை சான்று தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தவெக தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி. உஷா உத்தரவிட்டார். இதையடுத்து, தணிக்கைக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிய நிலையில் அவகாசம் வழங்காமல், உடனடியாக சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டதாக சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டு மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகள் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். இதைதொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த கடந்த 15ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட மறுத்துவிட்டது.இது குறித்து உயர் நீதிமன்றமே ஜனவரி 20-ம் தேதி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

Jana Nayagan case Vijay
Photo Credit:

ஜனநாயகன் வழக்கு: தணிக்கைக்குழு வாதம்: இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவச்சவா மற்றும் அருள்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. முதலாவதாக தணிக்கை குழு வாதங்களை முன்வைத்து வாதாடியது. அதில், ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டு 14 நீக்கிய பின், படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுக்கப்படும் என கூறினோம். இதையடுத்து, நீக்கப்பட்ட படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறோம் என்பதை இதை முறையாக, படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு முன்கூட்டியே நாங்கள் அறிவித்து இருக்கிறோம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் நாங்கள் தணிக்கை அளிக்க தாமதப்படுத்துவதாக வழக்கு தொடுத்து இருப்பதாகவும், எங்களுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் வாதாடித்தது.

தீர்ப்பு ஒத்திவைப்பு: இதையடுத்து வாதிட்ட தயாரிப்பு நிறுவனம், 14 காட்சிகளை நீக்கிவிட்டோம், நீக்கப்பட்ட அந்த காட்சிகளே புகாராக கூறி இருக்கிறார்கள். சென்சார் தொடர்பான அனைத்து வெளிப்படையாக தனித்தன்டையுடன் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என வாதிட்டது. மேலும், அமேசான் நிறுவனம் படம் எப்போது வெளியாகும் என கேட்கிறது. அவர்கள் எங்களிடம் நஷ்ட ஈடு கேட்டால் என்ன செய்து என இருதரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. இதையடுத்து நீதிபதிகள், சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என்ற கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழுதான் படத்தை பார்த்தது என்றனர். இருதரப்பு வதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பிற்காக காத்திருந்த ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X