ஜனநாயகன் வழக்கு காரசார வாதம்.. பதிலளிக்க எங்களுக்கு கால அவகாசம் தரவில்லை.. தணிக்கை குழு!
சென்னை: விஜயின் ஜனநாயகன் பட தணிக்கை சான்று தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்து இருக்கும் நிலையில், தணிக்கை குழுவின் வாதம் நடைபெற்று வருகிறது.
விஜயின் ஜனநாயகன் பட தணிக்கை சான்று தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தவெக தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்ற தனிநீதிபதி பி.டி. உஷா உத்தரவிட்டார். இதையடுத்து, தணிக்கைக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிய நிலையில் அவகாசம் வழங்காமல், உடனடியாக சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டதாக சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது.

நேரம் தரவில்லை: படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்யாத நிலையில், அதற்கும் தனி நீதிபதி தடைவிதித்துள்ளதாகவும் சென்சார் போர்டு தெரிவித்தது. இதையடுத்து, சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? படத்துக்கு சான்று பெறும் முன் வெளியீட்டு தேதி அறிவித்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து , ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சென்சார் போர்டு மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
தணிக்கைக்குழு வாதம்: இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவச்சவா மற்றும் அருள்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. முதலாவதாக தணிக்கை குழு வாதங்களை முன்வைத்து வாதாடி வருகிறது. அதில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், தணிக்கை வாரியம் ஜனநாயகம் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்காக மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறோம். இதை முறையாக, படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு முன்கூட்டியே நாங்கள் அறிவித்து இருக்கிறோம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் நாங்கள் தணிக்கை அளிக்க தாமதப்படுத்துவதாக வழக்கு தொடுத்து இருப்பதாக தணிக்கை குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்களின் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பதிலளிக்க எங்களுக்கு கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் வாதாடி வருகிறது.


Click it and Unblock the Notifications











