ஜன நாயகன் பட பிரபலத்துக்கு மிரட்டல்.. விஜய்யிடம் முறையீடு.. தளபதி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: GOAT படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் மமிதா பைஜுவும் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி நடிகையும், கமலின் மகளுமான ஸ்ருதி ஹாசனும் இந்தப் படத்தில் கமிட்டாகியிருப்பதாக் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. நல்ல எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். அவர் கட்சி ஆரம்பித்தபோதே இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன். அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் மட்டும்தான் தனது கவனம் இருக்கும் என்று அறிவித்திருந்தார். அது அவரது ரசிகர்களிடையே கொஞ்சம் சோகத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.

vijay jana nayagan h vinoth

ஜன நாயகன்: விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஹெச். வினோத் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள். வழக்கம்போல் அனிருத் இசையமைக்க பிரேமலு புகழ் மமிதா பைஜு உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஸ்ருதி ஹாசனும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக நேற்றிலிருந்து ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

போஸ்டர்கள்: படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியானது. இரண்டு போஸ்டர்களையும் பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக இந்தப் படம் அரசியல் சார்ந்த படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் இது அரசியல் படமாக இருக்காது; எல்லா தரப்பினரையும் கவரும் படமாகத்தான் இருக்கும்; அப்படி உருவாக்கத்தான் விஜய் சொல்லியிருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பே ஹெச்.வினோத் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நல்லா எடுத்துடுங்க வினோத்: விஜய்யின் ரசிகர்களை பொறுத்தவரை இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏனெனில் விஜய் சொல்லியபடி பார்த்தால் இனி அவர் சினிமாவில் நடிக்கப்போவதில்லை. கடைசி முறையாக தங்கள் தளபதியை திரையில் பார்க்கவிருக்கிறோம்; அதன் காரணமாக படம் தரமான சம்பவமாக செய்ய வேண்டும்; அவரது கரியரிலேயே காலம் கடந்து நிற்கும் படமாகவும் இருக்க வேண்டும்; எனவே ஹெச். வினோத் நன்றாக எடுத்துவிடுங்கள் என்று கோரிக்கைகளை வலுவாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பிரதீப் பேட்டி: இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் எடிட்டர் பிரதீப் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஒருமுறை ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். அப்போது விஜய் பிரேக்கில் இருந்தார். அந்த சமயத்தில் அவரிடம் என்னை ஹெச். வினோத் அறிமுகப்படுத்தி வைத்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை அவருடன் பேசினேன். அந்த உரையாடலின்போது, 'எங்கள் தளபதியின் கடைசி படம். எனவே நல்லா பண்ணு என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிரட்டுகிறார்கள் சார்' என்று கூறினேன். அதற்கு அவரோ, 'அந்த ப்ரெஷரையெல்லாம் ஏற்றிக்கொள்ளாமல் உங்கள் வேலையை கூலாக பாருங்கள்' என கூறியதாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X